நெருக்கடியிலிருந்து மீள இலங்கை முயற்சி

மக்­க­ளின் கோபம், ஆவே­சத்­தின் உச்­ச­கட்­ட­மாக அதி­பர் மாளிகை ஆக்­கி­ர­மிக்­கப்­பட்­டது. கோத்­த­பாய ராஜ­பக்சே பதவி வில­கி­ய­தைத் தொடர்ந்து மக்­கள் ஆக்­கி­ர­மிக்­கப்­பட்ட இடங்­க­ளி­லி­ருந்து வெளி­யேறி­ உள்­ள­னர்.

நாட்­டை­விட்டுத் தப்­பி­யோடி, சிங்­கப்­பூ­ரில் தங்­கி­யுள்ள கோத்­த­பாய ராஜ­பக்­சே­யும் அதி­பர் பத­வி­யி­லி­ருந்து வில­கி­யி­ருப்­ப­தால் இலங்கை தற்­போ­தைய நெருக்­க­டி­யி­லி­ருந்து மீண்டு வர முயற்சி செய்­கிறது.

பிர­த­மர் ரணில் விக்­ர­ம­சிங்க வெள்­ளிக்­கி­ழமை அன்று இடைக்­கால அதி­ப­ராக பொறுப்பு ஏற்­றுள்­ளார். அந்­தப் பத­வி­யில் அவர் நிரந்­ த­ர­மாக நீடித்­தி­ருக்க ஆளும் கட்சி அவ­ருக்கு ஆத­ர­வாக இருக்­கும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

ஆனால் இவ­ரும் பதவி விலக வேண்­டும் என்­பது ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்­க­ளின் முக்கிய கோரிக்­கை­யாக இருந்து வரு­கிறது.

இந்த நிலை­யில் தலை­ந­கர் கொழும்­பில் ஊர­டங்கு விலக்­கிக் கொள்­ளப்­பட்­ட­தால் வெள்­ளிக் கிழமை காலை வர்த்­த­கங்­கள், கடை­கள் மீண்­டும் திறக்­கப்­பட்­டன. முக்­கிய சாலை­களில் ராணுவ வீரர்­கள் இன்­ன­மும் வலம் வரு­கின்­ற­னர்.

அதே சம­யத்­தில் பெட்­ரோல் நிலை­யங்­களில் ஆயி­ரக்­க­ணக்­கான மக்­கள் பெட்­ரோ­லுக்­காக நீண்ட வரி­சை­யில் காத்­தி­ருக்­கின்­ற­னர்.

புதிய அதி­பரை தேர்ந்­தெ­டுப்­ப­தற்­கான நாடா­ளு­மன்ற நடை­மு­றை­கள் தொடங்­கப்­பட்­டுள்­ளன.

இம்­மா­தம் 20ஆம் தேதி அதி­பரை தேர்ந்­தெ­டுக்க நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் வாக்­க­ளிக்­க­வி­ருக்­கின்­ற­னர். சுமார் 13 நிமி­டங்­களே நீடித்த முதல் கூட்­டத்­தில் கோத்­த­பாய ராஜ பக்சே தனது கடி­தத்­தில் எழு­தி­யி­ருந்த சாத­னை­கள் வாசிக்­கப்­பட்­டன. "பொரு­ளி­யல் நெருக்­க­டியை நாம் எதிர்­நோக்­கி­யி­ருந்­தா­லும் கொள்­ளை­நோ­யி­லி­ருந்து எங்­கள் மக்­களை பாது­காக்க முடிந்­த­தில் எனக்கு தனிப்­பட்ட திருப்­தி­யைத் தரு­கிறது," என்று கடி­தத்­தில் கோத்­த­பாய ராஜபக்சே குறிப்­பிட்டு இருந்­தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!