தென் இந்தியாவுக்கு
அருகே இலங்கை தீவு
1948ல் ஆங்கிலேய ஆட்சியிலிருந்து இலங்கை சுதந்திரம் அடைந்தது. இங்கு வாழும் சிங்களர்கள், தமிழர்கள், முஸ்லிம்கள் ஒட்டுமொத்த 22 மில்லியன் மக்கள் தொகையில் 99 விழுக்காடு பங்கு வகிக்கின்றனர்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த
சகோதரர்களின் ஆதிக்கம்
2009ல் விடுதலைப் புலிகளை தோற்கடித்ததால் சிங்கள பெரும்பான்மையினரிடையே மஹிந்த ராஜபக்சே நாட்டின் கதாநாயகராகப் போற்றப்பட்டார். அப்போது தற்காப்பு அமைச்சராக இருந்த கோத்தபாய ராஜபக்சே பின்னர் அதிபராகி மக்கள் ஆர்ப்பாட்டத்தால் தற்போது நாட்டைவிட்டு தப்பியோடியிருக்கிறார்.
தெருவில் போராடிய மக்கள்
உணவு, மருந்து, எரிபொருள், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை தேவைகள்கூட இல்லாமல் பணவீக்கம் அதி கரித்ததால் சாதாரண மக்கள்கூடத் தெருவில் இறங்கிப் போராட ஆரம்பித்தனர். இந்த நிலைக்கு ராஜபக்சே குடும்பமும் அவர்களது ஆட்சியுமே காரணம் என்று மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

