புதுடெல்லி: 92 வயது மூதாட்டியான ரீனா சிபார் (படம்) என்பவர் கடந்த 75 ஆண்டுகளாக இந்தியாவில் வசித்து வருகிறார். இந்நிலையில், பாகிஸ்தானில் உள்ள தமது பாரம்பரிய வீட்டைக் காண்பதற்காக அவர் அங்கு சென்றுள்ளார்.
1947ஆம் ஆண்டில் பாகிஸ்தான் பிரிவினையை அடுத்து ரீனாவின் குடும்பம் இந்தியாவுக்கு இடம் பெயர்ந்துவிட்டது. அப்போது தமக்கு 15 வயதிருக்கும் என்றும் தாம் வசித்த அந்த வீட்டையும் தெருவையும் அண்டை வீட்டுக்காரர்களையும் இன்றுவரை மறக்கவில்லை என்றும் சொல்கிறார் ரீனா.
கடந்த 1965ஆம் ஆண்டு பாகிஸ்தான் செல்ல முயன்றபோது அவருக்கு விசா கிடைக்கவில்லை. தற்போது மூன்று மாத கால விசா கிடைத்துள்ளது.
இதையடுத்து பாகிஸ்தானின் ராவல்பிண்டி நகரில் உள்ள பிரேம் நிவாஸ் என்ற தனது பாரம்பரிய வீட்டைக் காண சிறுவயது நினைவுகளோடு அங்கு சென்றுள்ளார் ரீனா. சில நாள்கள் பாகிஸ்தானில் தங்கியிருக்கவும் அவர் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

