தலைமை நீதிபதி: சிறையில் உள்ளவர்களில் 80 விழுக்காட்டினர் விசாரணைக் கைதிகள்

ஜெய்ப்­பூர்: நாடு முழு­வ­தும் அதிக எண்­ணிக்­கை­யி­லா­ன­வர்­கள் எந்த விசா­ர­ணை­யும் இன்றி நீண்ட கால சிறை­வா­சத்தை அனு­ப­வித்து வருவதாக உச்ச நீதி­மன்ற தலைமை நீதி­பதி என்.வி.ரமணா கவலை தெரி­வித்­துள்­ளார்.

ஜெய்ப்­பூ­ரில் செய்­தி­யா­ளர்­களி­டம் பேசிய அவர், இவ்­வாறு பலர் பாதிக்­கப்­பட வழி­வ­குக்­கும் நடை­முறை­களை எதிர்த்து மக்­கள் கேள்வி கேட்க வேண்­டும் என்­றார்.

குற்­ற­வி­யல் அமைப்­பின் இத்­தகைய செயல்­மு­றையே ஒரு தண்­ட­னை­தான் என்­றும் இந்­தச் சிக்­கலைத் தீர்ப்­ப­தில் தேசிய சட்ட சேவை­கள் ஆணை­யம் கவ­னம் செலுத்த வேண்­டும் என்­றும் தலைமை நீதி­பதி வலி­யு­றுத்­தி­னார்.

"நாட்­டில் உள்ள 1,378 சிறை­களில் 6.1 லட்­சம் கைதி­கள் உள்­ள­னர். இவர்­களில் 80 விழுக்­காட்­டி­னர் விசா­ர­ணைக் கைதி­கள் ஆவர். இந்த விஷ­யத்­தில் சிறை­கள் 'கருப்­புப் பெட்டி'களாக உள்­ளன.

"இதில் விளிம்­பு­நிலை சமூ­கங்­களைச் சேர்ந்­த­வர்­கள் மீது சிறைச்­சா­லை­கள் வேறு­பட்ட தாக்­கத்தை ஏற்­ப­டுத்­து­கின்­றன. விசா­ரணைக் கைதி­களை முன்­கூட்­டியே விடு­தலை செய்­வது மட்­டுமே இலக்­காக இருக்­கக் கூடாது. இந்த நடை­முறை குறித்த தெளிவும் வேண்­டும்," என்­றார் தலைமை நீதி­பதி ரமணா.

நாட்­டில் நிலு­வை­யில் உள்ள வழக்­கு­க­ளின் எண்­ணிக்கை 5 கோடி­யாக அதி­க­ரித்­துள்­ள­தாக மத்­திய சட்ட அமைச்­சர் கிரண் ரிஜ்ஜூ கவலை தெரி­வித்­துள்­ள­தைச் சுட்­டிக்­காட்­டிய அவர், இதற்­குத் தீர்வு காண வேண்­டு­மெ­னில், நாடு முழு­வ­தும் நீதி­மன்­றங்­களில் காலி­யாக உள்ள நீதி­ப­தி­க­ளுக்­கான இடங்­களை நிரப்ப வேண்­டும் என்­றும் நீதித்­துறை கட்­ட­மைப்­பில் தேவை­யான சீர்த்­தி­ருத்­தங்­க­ளைச் செய்ய வேண்­டும் என்­றும் வலி­யு­றுத்­தி­னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!