ஆந்திராவில் வெள்ளப்பெருக்கால் 2 மில்லியன் மக்கள் தவிப்பு

அம­ராவதி: ஆந்­தி­ரா­வில் நீடித்து வரும் கன­மழை, வெள்­ளப்­பெ­ருக்கு கார­ண­மாக இது­வரை ஆறு மாவட்­டங்­க­ளைச் சேர்ந்த இரு­பது லட்­சம் பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர்.

கோதா­வரி ஆற்­றில் வெள்­ளம் கரை புரண்டு ஓடு­வ­தை­ய­டுத்து, தோவ­லேஸ்­வ­ரம் அணை­யில் இருந்து 19.05 லட்­சம் கன­அடி தண்­ணீர் திறந்துவிடப்­பட்­டுள்­ள­தாக அம்­மா­நில பொதுப்­ப­ணித்­துறை தெரி­வித்­துள்­ளது.

இத­னால் ஆற்­றின் கரை­யோரப் பகு­தி­களில் வெள்­ளப்­பெ­ருக்கு மேலும் மோச­ம­டைந்­துள்­ளது. ஆறு மாவட்­டங்­களில் உள்ள 628 கிரா­மங்­கள் வெகு­வா­கப் பாதிக்­கப்­பட்­டுள்­ளன. சுமார் 77 ஆயி­ரம் பேர் மீட்­கப்­பட்டு நிவா­ரண மையங்­களில் தங்க வைக்­கப்­பட்­டுள்­ள­னர்.

தேவைப்­பட்­டால் மீட்­புப் பணி­யில் இரண்டு ராணுவ ஹெலி­காப்­டர்­கள் ஈடு­ப­டுத்­தப்­படும் என்று ஆந்திர முதல்­வர் ஜெகன்­மோ­கன் ரெட்டி தெரி­வித்­துள்­ளார். மத்­திய, மாநில பேரி­டர் மீட்­புக் குழு­வி­னர் தற்­போது மீட்­புப் பணி­யில் ஈடு­பட்­டுள்­ள­தாக அவர் கூறி­னார்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு தலா 25 கிலோ அரிசி, ஒரு கிலோ பருப்பு, சமையல் எண்ணெய், உருளைக்கிழங்கு, வெங்காயம் ஆகியவற்றை விநியோகிக்க வேண்டும் என முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.

கனமழை, வெள்ளத்தால் அம்மாநிலத்தில் ஆயிரம் கிலோ மீட்டர் நீளத்துக்கு சாலைகள் சேதம் அடைந்துள்ளன.

ஆந்­தி­ரா­வின் அண்டை மாநி­ல­மான தெலுங்­கா­னா­வும் ஒடிசா மாநி­ல­மும்­கூட மழை­யின் கோரப்­பி­டி­யில் சிக்கி உள்­ளன. இரு மாநி­லங்­க­ளி­லும் முந்­நூ­றுக்­கும் மேற்­பட்ட கிரா­மங்­கள் வெள்­ளக்­கா­டாகி உள்­ளன. மின்­சா­ரம் துண்­டிக்­கப்­பட்ட நிலை­யில், மக்­க­ளின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

தெலுங்­கா­னா­வின் பத்­ராத்ரி கொத்­த­கு­டம் மாவட்­டத்­தில் உள்ள கோவில் நக­ர­மான பத்­ராச்­ச­லம் வெள்­ளத்­தில் மூழ்கி உள்­ள­தா­கத் தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன. சுமார் முப்­பது ஆண்­டு­க­ளுக்­குப்­ பி­றகு அந்­தப் பகு­தி­யில் மழை, வெள்­ளம் பெரும் சேதத்தை ஏற்­ப­டுத்தி உள்­ளன.

நேற்று காலை நில­வ­ரப்­படி ராஜஸ்­தான் மாநி­லத்­தின் பல்­வேறு பகு­தி­களில் கன­மழை நீடித்து வரு­கிறது. அதி­க­பட்­ச­மாக நாகௌர் மாவட்­டத்­தில் உள்ள மக்­ரானா பகு­தி­யில் 13 சென்­டி­மீட்­டர் மழை பதி­வா­கி­யுள்­ளது. இந்­நி­லை­யில், அஜ்­மீர், பரத்­பூர், ஜெய்ப்­பூர், கோட்டா, உதய்­பூர் ஆகிய பகு­தி­களில் மழை நீடிக்­கும் என வானிலை ஆய்வு மையம் கணித்­துள்­ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!