புவனேஸ்வர்: திறந்தவெளியில் இருந்த அசுத்தமான குடிநீரை குடித்த ஆறு பேர் உயிரிழந்த சம்பவம் ஒடிசாவில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
அங்குள்ள ரயகடா மாவட்டத்தில் உள்ள சில கிராமங்களைச் சேர்ந்தவர்கள் அந்தக் குடிநீர் மாசடைந்துள்ளதை அறியாமல் அதை குடித்து வந்துள்ளனர்.
இந்நிலையில், 80 பேருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. அவர்களில் சிகிச்சை பலனின்றி ஆறு பேர் மாண்டுவிட்டனர். மற்றவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

