இந்தியாவில் மற்றொரு குரங்கம்மை சம்பவம்

இந்தியாவில் மற்றொரு குரங்கம்மை சம்பவம்

1 mins read
60541257-d884-422d-a56b-0fc4b56d8600
படம்: ராய்ட்டர்ஸ் -

இந்தியாவில் மேலும் ஒருவருக்கு குரங்கம்மை தொற்று உறுதியாகியுள்ளது. ஜூலை 13 அன்று அந்த நபர் துபாயிலிருந்து மங்களூருக்கு வந்ததாகக் கூறப்பட்டது. 31 வயதான அந்த ஆடவர் கேரள மாநிலம் கன்னூரைச் சேர்ந்தவர்.

அவரிடம் குரங்கம்மை தொற்று அறிகுறிகள் தென்பட்டதைத் தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தொற்று இருப்பது பின்னர் உறுதிப்படுத்தப்பட்டது. அவருடைய உடல்நிலை சீராக இருப்பதாகக் கூறப்பட்டது.

சென்ற வாரம் கேரளாவைச் சேர்ந்த மற்றொரு ஆடவருக்கு தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவர் ஐக்கிய அரபு சிற்றரசுகளிலிருந்து இந்தியாவுக்கு பயணம் வந்திருந்தார். குரங்கம்மையை உலக சுகாதார நெருக்கடியாக அறிவிப்பது குறித்து உலக சுகாதார அமைப்பு கூட்டம் நடத்தவுள்ளது. கூட்டம் இம்மாதம் 21ஆம் தேதியன்று நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.