இலங்கைப் புரட்சியை வழிநடத்திய தமிழர்

உயிரைப் பறிக்கச் சொன்னவரின் பதவியைப் பறிக்கும்வரை போராட்டம்

கொழும்பு: சில ஆண்டு­க­ளுக்கு முன்பு தன் உயி­ரைப் பறிக்க உத்­த­ர­விட்ட கோத்­தபாய ராஜ­பக்­சேவை இப்­போது அதி­பர் பத­வி­யில் இருந்து அகற்­றி­ய­தில் முக்­கிய பங்­காற்றி உள்­ளார் சமூக செயல்­பாட்­டா­ள­ரான பிரேமகு­மார் குண­ரத்­னம் (படம்).

கடந்த 2012ஆம் ஆண்டு அன்­றைய இலங்கை பாது­காப்­புப் படை­யின் தலை­வ­ராக இருந்த கோத்தபாய ராஜ­பக்­சே­வின் ஆள்க­ளால் தாம் கடத்­திச் செல்­லப்­பட்­ட­தா­க­வும் தம்­மைக் கொன்­று­வி­டு­மாறு கோத்தபாய உத்­த­ர­விட்டு இருந்­த­தா­க­வும் ஊட­கப் பேட்டியில் அவர் குறிப்­பிட்­டுள்­ளார்.

அச்­ச­ம­யம் அர­சாங்­கத்­துக்கு எதி­ரா­கப் பேசிய அர­சி­யல் பிர­மு­கர்­கள், ஊட­க­வி­ய­லா­ளர்­கள் உள்­ளிட்ட பலர் 'வெள்ளை வேன்' என்று குறிப்­பி­டப்­படும் பதி­வெண்­கள் இல்­லாத வாக­னங்­களில் கடத்­திச் செல்­லப்­பட்­ட­தா­கக் குறிப்­பிட்­டுள்ள அவர், கடத்­தப்­பட்­ட­ட­வர்­களில் பெரும்­பா­லா­னோர் பிறகு திரும்பி வர­வில்லை என்­றார். தற்­போது 56 வய­தா­கும் பிரேமகுமார் குண­ரத்­ன­மும் புதிய அர­சி­யல் கட்­சியைத் தொடங்க இருந்த வேளை­யில் இவ்­வாறு கடத்­தப்­பட்­டார். எனி­னும் நான்கு நாள்­க­ளுக்­குப் பிறகு எதிர்­பா­ராத வகை­யில் விடு­விக்­கப்­பட்­டார். அன்று பாது­காப்­புப் படை­யின் தலை­வ­ராக இருந்த கோத்தபாய ராஜ­பக்சே பின்­னாள்­களில் இலங்கை அதி­ப­ரா­கப் பொறுப்­பேற்­றார்.எனி­னும் பிரேமகு­மார் குண­ரத்­னம் தனது செயல்­பா­டு­களை மாற்­றிக்­கொள்­ள­வில்லை. இலங்­கை­யில் கடந்த சில மாதங்­க­ளாக நீடித்து வரும் மக்­கள் போராட்­டங்­களை சத்­த­மின்றி வழிநடத்தி வந்­தது இவர்­தான் என இலங்கை ஊட­கங்­கள் கூறின.

இதன் மூலம் கோத்தபாயவை நாட்­டை­விட்டே வெளி­யே­றச் செய்­த­தும் இவர்­தான் என்­கின்­றன அவை.

"இது ஜனநாயகத்துக்கு கிடைத்த வெற்றி. போராட்டங்கள் மூலம் உண்மையான ஜனநாயகம் என்றால் என்ன என்பதை மக்கள் புரிய வைத்துள்ளனர்," என்கிறார் பிரேம­கு­மார் குண­ரத்­னம்.

ஆதிமூலம் பிள்ளை குணரத்னம், வள்ளியம்மா ராஜாமணி ஆகியோ ரின் மகன் பிரேமகுமார் குணரத்னம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!