மாணவிகளின் உள்ளாடையை அகற்ற உத்தரவு: கேரளாவில் கொந்தளிப்பு

திரு­வ­னந்தபுரம்: மருத்­து­வப் படிப்­புக்­கான நீட் நுழை­வுத் தேர்வு எழுத வந்த மாண­வி­க­ளின் உள்­ளா­டையைக் கழற்­றிய பிறகு தேர்வு எழுத அனு­ம­தித்­த­தா­கக் கூறப்­படும் சம்­ப­வம் கேர­ளா­வில் கொந்­த­ளிப்பை ஏற்­ப­டுத்தி உள்­ளது.

இது அவ­மா­ன­க­ர­மான ஒரு நிகழ்வு என்­றும் இது தொடர்­பாக நட­வ­டிக்கை எடுக்க வேண்­டும் என்­றும் மாணவி ஒருவர் காவல்­து­றை­யில் புகார் அளித்­துள்­ளார்.

அதன் பேரில் இச்­சம்­ப­வத்­துடன் தொடர்­பு­டைய காவல்­து­றை­யி­னர் மீது வழக்­குப்­ப­திவு செய்­யப்­பட்டு உள்­ளது.

கேர­ளா­வின் கொல்­லம் மாவட்­டம் ஆயூ­ரில் உள்ள தனி­யார் கல்வி நிறு­வ­னத்­தில் ஞாயிற்­றுக்­கி­ழமை நடை­பெற்ற நீட் தேர்­வின்­போது, அதை எழுத வந்த மாண­வி­கள், திடீரென உள்­ளா­டை­கள் தொடர்­பாக பிறப்­பிக்­கப்­பட்ட உத்­த­ர­வால் கடும் அதிர்ச்சி அடைந்­த­னர்.

இது­கு­றித்து புகார் அளித்த மாண­வி­யின் வாக்­கு­மூ­லத்தை பெண் அதி­கா­ரி­கள் மட்­டுமே இடம்­பெற்ற ஒரு குழு பதிவு செய்­தது.

அதன் அடிப்­ப­டை­யில் வழக்­குப் பதிவு செய்­யப்­பட்­டுள்­ளது என்­றும் விசா­ரணை தொடங்கி உள்­ளது என்­றும் காவல்­துறை தரப்­பில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

மேலும், சம்­பந்­தப்­பட்ட காவல்­துறை­யி­னர் கைது செய்­யப்­ப­டு­வார்­கள் என­வும் எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

இந்த ஆண்­டுக்­கான நீட் நுழைவுத் தேர்வு கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை நடை­பெற்­றது.

நாடு முழு­தும் சுமார் 3,500 மையங்­களில் இந்­தத் தேர்வு நடை­பெற்ற நிலை­யில், 10.64 லட்­சம் மாண­வி­யர் உட்­பட 18.72 லட்­சம் பேர் இத்­தேர்வை எழுத விண்­ணப்­பித்து இருந்­த­னர்.

அவர்­களில் 15 லட்­சம் பேர் தேர்வை எழு­தி­யதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!