விலைவாசி உயர்வுக்கு எதிராக நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டம்

விலைவாசி உயர்வுக்கு எதிராக நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டம்

1 mins read
edd3683e-4f3e-4eac-9b4a-cb04a3742d45
சமையல் எரிவாயு விலை ஆயிரம் ரூபாய்க்கும் அதிகமாக உள்ளதாக எதிர்க்கட்சிகள் சாடியுள்ளன. சாமானிய மக்களால் அதை எப்படி வாங்க முடியும்? எனும் கேள்விகள் அடங்கிய பதாகைகளை நேற்று நடந்த போராட்டத்தின்போது எதிர்க்கட்சி எம்பிக்கள் ஏந்தியிருந்தனர். படம்: ஊடகம் -

புது­டெல்லி: பண­வீக்­கம், விலை­வாசி உயர்வைக் கண்­டித்து நாடா­ளு­மன்ற வளா­கத்­தில் எதிர்க்­கட்சி உறுப்­பி­னர்­கள் நடத்­திய ஆர்ப்­பாட்­டம் கார­ண­மாக பர­ப­ரப்பு நில­வி­யது. இதில் காங்­கி­ரஸ் முன்­னாள் தலை­வர் ராகுல் காந்­தி­யும் பங்­கேற்­றார்.

நாடா­ளு­மன்ற வளா­கத்­தில் ஆர்ப்­பாட்­டங்­கள், போராட்­டங்­கள் நடத்த தடை விதிக்­கப்­ப­டு­வ­தாக மத்­திய அரசு அறி­வித்த சில தினங்­க­ளுக்­குள் எதிர்க்­கட்­சி­கள் அதை மீறி­யுள்­ளன.

விலை­வாசி உயர்வு, பண­வீக்க விகி­தம், ஜிஎஸ்டி உயர்வு ஆகி­ய­வற்­றுக்கு எதி­ராக இந்­தப் போராட்­டத்தை நடத்­து­வ­தாக மூத்த காங்­கி­ரஸ் தலை­வர் மல்­லி­கார்­ஜுன கார்கே தெரி­வித்­தார்.

அத்­தி­யா­வ­சி­யப் பொருள்­க­ளின் விலை உயர்வை ஏற்க இய­லாது என்­றும், அனைத்து எதிர்க்­கட்­சி­களும் ஒருங்­கி­ணைந்து இப்­போ­ராட்­டத்தை நடத்­து­வ­தா­க­வும் அவர் குறிப்­பிட்­டார்.

இந்­நி­லை­யில், மாநி­லங்­க­ள­வை­யைச் சேர்ந்த திமுக, இட­து­சாரி எம்­பிக்­கள் விலை­வாசி உயர்வு தொடர்­பாக விவா­திக்­கக் கோரி ஒத்­தி­வைப்பு தீர்­மான நோட்­டீஸ் கொடுத்­துள்­ள­னர்.

எனி­னும் நேற்று மக்­க­ளவை, மாநி­லங்­க­ளவை­யில் எதிர்க்­கட்­சி­கள் தொடர் அம­ளி­யில் ஈடு­பட்­ட­தால் அவை நட­வ­டிக்­கை­கள் பிற்­ப­கல் 2 மணி­வரை ஒத்­தி­வைக்­கப்­பட்­டன.