இந்தியாவில் சென்ற ஆண்டு 1,63,370 பேர் இந்தியக் குடியுரிமையைத் துறந்ததாக மத்திய உள்துறைத் துணையமைச்சர் நித்தியானந்த ராய் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இவர்களில் 78,284 பேர் அமெரிக்கக் குடியுரிமைக்காக இந்தியக் குடியுரிமையைத் துறந்தனர்.
மற்றவர்கள் ஆஸ்திரேலியா, கனடா, இங்கிலாந்து, இத்தாலி, நியூசிலாந்து, சிங்கப்பூர், ஜெர்மனி, நெதர்லாந்து, சுவீடன் ஆகிய நாடுகளில் குடியுரிமை பெற ஏதுவாக இந்தியக் குடியுரிமையைத் துறந்தனர்.
பகுஜன் சமாஜ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரின் கேள்விக்குப் பதிலளித்துப் பேசியபோது திரு நித்தியானந்த ராய் இந்தத் தகவல்களை வெளியிட்டார்.

