தடுப்பூசி செலுத்தியோருக்கு மோடி பாராட்டுக் கடிதம்

புது­டெல்லி: நாடு முழு­வ­தும் கொவிட்-19 கிரு­மித்­தொற்­றுக்கு எதி­ரான 200 கோடி தடுப்­பூ­சி­கள் செலுத்­தப்­பட்­டுள்ள வேளை­யில், தடுப்­பூசி செலுத்­திக் கொண்­டோ­ருக்­குப் பிர­த­மர் நரேந்­திர மோடி தனிப்­பட்ட முறை­யில் பாராட்­டுக் கடி­தம் எழு­தி­யுள்­ளார்.

இம்­மா­தம் 17ஆம் தேதி 200 கோடி தடுப்­பூ­சி­கள் என்­னும் மைல்­கல்லை எட்­டி­ய­தை­ய­டுத்­துப் பிர­த­மர் தடுப்­பூசி போட்­டுக்­கொண்ட ஒவ்­வொ­ருவருக்­கும் தனிப்­பட்ட கடி­தத்தை எழு­தி­யுள்­ளார். தடுப்­பூசி போட்­டுக்­கொண்­ட­வர்­கள், 'கோவின்' தளத்­தில் இருந்து பிர­த­ம­ரின் பாராட்­டுக் கடி­தத்­தைப் பதி­வி­றக்­கம் செய்து கொள்ள இய­லும் என்று மத்­திய சுகா­தார அமைச்சு தெரி­வித்­துள்­ளது.

இதற்­கி­டையே, இந்­தி­யா­வில் 200 கோடி கொவிட்-19 தடுப்­பூ­சி­கள் செலுத்­தப்­பட்­ட­தைப் பாராட்டி 'மைக்­ரோ­சாப்ட்' நிறு­வ­னத்­தின் நிறு­வ­னர் பில்­கேட்ஸ், பிர­த­மர் மோடிக்கு வாழ்த்து தெரி­வித்­துள்­ளார். கிரு­மிப்­ப­ர­வ­லின் தாக்­கத்­தைத் தணிக்க இது உத­வி­ய­தாக திரு கேட்ஸ் தமது டுவிட்­டர் பதி­வில் குறிப்­பிட்­டுள்­ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!