சாதனை: ஒரே மரத்தில் 300 வகை மாம்பழங்கள்

சாதனை: ஒரே மரத்தில் 300 வகை மாம்பழங்கள்

1 mins read
695439e8-fdc4-4de8-918d-2d9c976fa27d
பாலைவனத்திலும் தன்னால் மாம்பழம் விளைவிக்க இயலும் என்று நம்பிக்கையுடன் கூறும் 'மாம்பழ மனிதர்' கலீம் உல்லா கான், இறுதிமூச்சு வரை தன் ஆதர்ச மாமரத்தின் மூலம் விதவிதமான மாம்பழங்களை விளைவிக்கும் முயற்சியைத் தொடரப் போவதாகக் கூறுகிறார். படம்: ஏஎஃப்பி -

மலி­கா­பாத்: கலீம் உல்லா கானுக்கு வயது 82. உத்­த­ரப் பிர­தே­சத்­தின் மலி­கா­பாத்­தில் 'மாம்­பழ மனி­தர்' என்ற செல்­லப் பெயர் இவ­ருக்கு உண்டு.

ஏறக்­கு­றைய 120 ஆண்­டு­கள் பழ­மை­யான மாம­ரத்தை இவர் பேணிவரு­கி­றார். தோட்­டக்­க­லை­யில் 'கிரா­ஃப்­டிங்' எனப்­படும் கிளையை வெட்டி ஒட்­டும் முறை மூலம் இவர் இது­வரை 300 வகை­யான மாம்­ப­ழங்­களை இந்த மரத்­தில் விளை­வித்­துள்­ளார்.

உலக அழகி ஐஸ்­வர்யா ராய், பிர­த­மர் நரேந்­திர மோடி, கிரிக்­கெட் வீரர் சச்­சின் டெண்­டுல்­கர் போன்­றோ­ரின் பெயர்­களை இந்த மாம்­பழங்­க­ளுக்­குச் சூட்டி மகிழ்­கி­றார்.

'அனார்­கலி' எனும் வகை மாம்­பழத்­தில் இரு­வேறு தோல்­கள் அடுக்­க­டுக்­காய்க் காணப்­ப­டு­கின்­றன. உள்­ளி­ருக்­கும் பழத்­திற்கு இரு­வேறு சுவை­யும் வித்­தி­யா­ச­மான மண­மும் இருக்­கிறது.

பாலை­வ­னத்­தி­லும் மாம்­ப­ழம் பயி­ரி­டு­வேன் என்று கூறும் இவ­ருக்கு ஈரான், ஐக்­கிய அர­புச் சிற்­ற­ர­சு­கள் ஆகி­ய­வற்­றில் இருந்து சிறப்பு அழைப்­பு­கள் வந்தவண்ணம் உள்ளன.

இவருக்கு 2008ஆம் ஆண்டில் இந்­திய அர­சாங்­கம் பத்­ம­ஸ்ரீ விருது வழங்கி கௌர­வித்­தது.