நாடாளுமன்றம் ஒத்திவைப்பு

ஜிஎஸ்டி, விலை உயர்வைக் கண்டித்து எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டம்

புது­டெல்லி: நாடா­ளு­மன்­றத்­தின் மழைக்­கா­லக் கூட்­டத் தொட­ரின் மூன்­றாம் நாளான நேற்று எதிர்க்­கட்சி நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் அர­சாங்­கத்­துக்கு எதி­ரான முழக்­கங்­களை எழுப்பி ஆர்ப்­பாட்­டம் செய்­த­னர்.

பண­வீக்­கம், அத்­தி­யா­வ­சி­யப் பொருள்­கள் மீதான பொருள், சேவை வரி (ஜிஎஸ்டி) போன்­ற­வற்­றைக் கண்­டித்து காங்­கி­ரஸ், திமுக, இட­து­சாரி, சிவசேனா உள்­ளிட்ட கட்­சி­யி­னர் முதலில் நாடா­ளு­மன்ற வளா­கத்­தில் போராட்­டத்­தில் ஈடு­பட்­ட­னர்.

இம்­மா­தம் 18ஆம் தேதி, தயிர், அரிசி உள்­ளிட்ட அத்­தி­யா­வ­சி­யப் பொருள்­க­ளுக்­கான ஐந்து விழுக்­காட்டு ஜிஎஸ்டி குறித்து மத்­திய அர­சாங்­கம் அறி­வித்­தது.

இத­னைத் திரும்­பப் பெறக் கோரி நாடா­ளு­மன்ற வளா­கத்­தில் உள்ள மகாத்மா காந்தி சிலை முன்பு நடை­பெற்ற போராட்­டத்­தில் காங்­கி­ரஸ் தலை­வர்­கள் ராகுல் காந்தி, மல்­லி­கார்­ஜூன கார்கே உள்­ளிட்­டோர் கலந்து கொண்­ட­னர்.

பின்­னர் மக்களவை கூடி­ய­தும், அவை­யின் மத்­திய பகு­திக்­குச் சென்­றும் எதிர்க்­கட்­சி­யி­னர் தங்­கள் கோரிக்­கை­களை வலி­யு­றுத்தி முழக்­க­மிட்­ட­னர்.

இந்த அம­ளி­யைத் தொடர்ந்து நாடா­ளு­மன்ற நாய­கர் ஓம்­பிர்லா அவையை ஒத்­தி­வைத்­தார். இதற்கிடையே மாநி­லங்­க­ள­வை­யும் இத்தகைய ஆர்ப்பாட்டத்தால் ஒத்தி­வைக்­கப்­பட்­டது.

சென்ற திங்­கட்­கி­ழமை தொடங்­கிய நாடா­ளு­மன்­றத்­தின் மழைக்­கா­லக் கூட்­டத் தொடரில் தொடர்ந்து மூன்றாவது நாளாக அவைகள் ஒத்திவைக்கப்பட்டன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!