மத்திய அரசாங்கத் துறைகளில் 9.8 லட்சம் வேலையிடங்கள் காலி

மத்திய அரசாங்கத் துறைகளில் 9.8 லட்சம் வேலையிடங்கள் காலி

1 mins read
410bc57c-4923-4eec-a06a-eb1a3a21dd4e
-

புது­டெல்லி: மத்­திய அர­சாங்க அலு­வ­ல­கங்­களில் 2021ஆம் ஆண்டு மார்ச் 1ஆம் தேதி நில­வ­ரப்­படி ஏறக்­கு­றைய 9.79 லட்­சம் வேலை­கள் காலி­யாக இருந்­த­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

மொத்­தம் 40.35 லட்­சம் பணி­யி­டங்­கள் இருந்­த­தா­க­வும் இவற்­றில் 30.56 லட்­சம் பணி­யா­ளர்­கள் மட்­டுமே வேலை செய்­த­தா­க­வும் நேற்று தெரி­விக்­கப்­பட்­டது.

அர­சுத்­துறை வேலை­கள் பிரி­வுக்­குப் பொறுப்பு வகிக்­கும் துணை­ய­மைச்­சர் ஜிதேந்­திர சிங் நாடா­ளு­மன்­றத்­திற்கு அளித்த எழுத்­து­பூர்வ பதி­லில் இத­னைக் குறிப்­பிட்­டுள்­ளார்.

சம்­பள ஆய்­வுப் பிரி­வின் வரு­டாந்­தர ஆய்­வ­றிக்­கை­யில் இந்­தத் தக­வல்­கள் இடம்­பெற்­றுள்­ள­தாக அவர் தெரி­வித்­தார்.

மத்­திய அர­சாங்­கத் துறை வேலை­களை உரு­வாக்­கு­வ­தும் அவற்­றுக்­கான ஆள்­சேர்ப்­பும் அந்­தந்த அமைச்­சு­கள், துறை­க­ளின் பொறுப்பு என்று கூறிய திரு சிங், இது ஒரு தொடர்ச்­சி­யான நடை­முறை என்­றார். பணி ஓய்வு, பதவி உயர்வு, வேலை வில­கல், உயி­ரி­ழப்பு போன்­ற­வற்­றால் வேலை­கள் காலி­யா­வதை அவர் சுட்­டி­னார்.

மற்­றொரு கேள்­விக்கு அளித்த பதி­லில் மத்­திய அமைச்­சின் பல்­வேறு பிரி­வு­களில் 30.87 லட்­சத்­துக்­கும் அதி­க­மா­னோர் நிரந்­தர வேலை­யில் இருப்­ப­தா­க­வும் இவர்­களில் 3.37 லட்­சத்­துக்­கும் மேலா­னோர் பெண்­கள் என்­றும் திரு. சிங் குறிப்­பிட்­டார்.

காலி­யாக உள்ள பணி­யி­டங்­க­ளுக்கு கால வரை­யறை விதித்து ஆள்­சேர்ப்­பில் கவ­னம் செலுத்­தும்­படி அனைத்­துத் துறை­களும் கேட்­டுக்­கொள்­ளப்­பட்­டி­ருப்­ப­தாக அவர் தெரி­வித்­தார்.