அமெரிக்கா-சென்னை: 26 மணி நேரத்தில் கொண்டுவரப்பட்ட இதய நோயாளி

அமெரிக்கா-சென்னை: 26 மணி நேரத்தில் கொண்டுவரப்பட்ட இதய நோயாளி

1 mins read
93cabd39-cb49-48df-a477-109b82e9a955
தீவிர இதய நோயால் சிரமப்படும் 67 வயதுப் பெண், அமெரிக்காவிலிருந்து ஐஸ்லாந்து, துருக்கி வழியாக 26 மணி நேரத்தில் சென்னை கொண்டுவரப்பட்டடார். படம்: டைம்ஸ் ஆஃப் இந்தியா -

பெங்களூரு: பெங்களூரைச் சேர்ந்த 67 வயதுப் பெண் கடந்த சில ஆண்டுகளாக அமெரிக்காவின் ஆரிகன் மாநிலத்தில் தனது பிள்ளைகளுடன் வசித்துவந்தார்.

இவருக்கு இதய நோய் கண்டறியப்பட்ட நிலையில் அங்கிருந்து 'ஏர் ஆம்புலன்ஸ்' எனப்படும் மருத்துவ விமானத்தின் மூலம் 26 மணி நேரப் பயணத்தில் நேற்று முன்தினம் சென்னை கொண்டுவரப்பட்டார்.

இடையில் மூன்று நிறுத்தங்கள்; ஐஸ்லாந்து, துருக்கி ஆகிய நாடுகளின் வழியாக இரு வேறு விமானங்களில், தீவிர சிகிச்சை மருத்துவக் குழுவினருடன் கொண்டுவரப்பட்ட இந்த மாது, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் இதய அறுவைச் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.

இந்த விமா­னப் பய­ணத்­துக்கு 133,000 டால­ருக்­கும் மேல் செல­வா­ன­தா­கக் கூறப்­பட்­டது. இந்­தி­யக் குடி­யு­ரிமை பெற்­றி­ருக்­கும் மாதுக்கு அமெ­ரிக்­கா­வில் மருத்­து­வக் காப்­பீட்­டுச் சிக்­கல் இருந்­த­தா­கக் கூறப்­பட்­டது.

'ஏர் ஆம்­பு­லன்­சில்' இந்­தியா கொண்­டு­வ­ரும் செல­வைக் காட்­டி­லும் அமெ­ரிக்­கா­வில் இவ­ரது சிகிச்­சைக்­குக் கட்­ட­ணம் அதி­கம் என்­பதை 'ஏர் ஆம்­பு­லன்ஸ்' சேவை வழங்­கிய நிறு­வ­னம் சுட்­டி­யது.