திருவனந்தபுரம்: கேரள முதல்வர் பினராயி விஜயனைச் சென்ற மாதம் விமானத்தில் கொல்லச் சதித் திட்டம் தீட்டியதாக சட்டமன்ற முன்னாள் உறுப்பினரும் இளைஞர் காங்கிரஸ் மாநில துணைத் தலைவருமான சபரிநாதன் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருவனந்தபுரம் தங்கக் கடத்தல் விவகாரத்தில் முதல்வருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் தொடர்பு இருப்பதாகக் கூறப்பட்ட நிலையில், சென்ற மாதம் முதல்வர் பினராயி கண்ணூரில் இருந்து இண்டிகோ விமானம் மூலம் திருவனந்தபுரம் சென்றார்.
அப்போது அவருக்கு எதிராக இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர். இது தொடர்பான விசாரணைக்கு வரும்படி காவல்துறை அறிக்கை அனுப்பியதால் நேரில் சென்ற சபரிநாதன் இவ்வழக்கில் முன் ஜாமீன் கோரியிருந்தார். இது தொடர்பான விசாரணையின்போது சபரிநாதனைக் கைது செய்திருப்பதாகக் காவல்துறை, திருவனந்தபுரம் நீதிமன்றத்தில் தெரிவித்தது.

