நிதியமைச்சர்: கேரளாவில் அரிசி, பருப்புக்கு ஜிஎஸ்டி இல்லை

நிதியமைச்சர்: கேரளாவில் அரிசி, பருப்புக்கு ஜிஎஸ்டி இல்லை

1 mins read
57360a41-f883-4a23-8a39-d09380f68b09
-

திரு­வ­னந்­த­பு­ரம்: கேரள மாநில நிதி­ய­மைச்­சர் பால­கோ­பால், மத்­திய அரசு கூறி­ய­து­போல பால், தயிர், அரிசி உள்­ளிட்ட அத்­தி­யா­வ­சி­யப் பொருள்­க­ளுக்கு கேர­ளா­வில் பொருள், சேவை வரி (ஜிஎஸ்டி ) விதிக்­கப்­ப­ட­மாட்­டாது என்று கூறி­யுள்­ளார்.

மாநில சட்­ட­மன்­றத்­தில் அவர் இத­னைத் தெரி­வித்­தார்.

சாமா­னி­யர்­க­ளைப் பாதிக்­கும் இந்த வரியை மாநில அரசு எதிர்ப்­ப­தாக அமைச்­சர் பால­கோ­பால் குறிப்­பிட்­டார்.

"இது தொடர்­பாக ஜிஎஸ்டி கவுன்­சி­லுக்கு நேரில் சென்­றும் கடி­தம் மூல­மும் தக­வல் தெரி­வித்­துள்­ளோம். கேரள முதல்­வ­ரும் இது­பற்றி பிர­த­மர் நரேந்­திர மோடிக்குக் கடி­தம் எழுதி உள்­ளார்.

"எனவே பொது­மக்­க­ளைப் பாதிக்­கும் வகை­யில் உணவு தானி­யங்­க­ளுக்­கான ஐந்து விழுக்­காட்டு ஜிஎஸ்­டியை கேர­ளா­வில் அமல்­படுத்­த­மாட்­டோம்,' என்று நிதி­ய­மைச்­சர் பாலகோபால் கூறி­னார்.