ரயில் வருவதற்கு சில நொடிகளுக்கு முன்பு தண்டவாளத்தை கடந்த பெண்(காணொளி)

ரயில் வருவதற்கு சில நொடிகளுக்கு முன்பு தண்டவாளத்தை கடந்த பெண்(காணொளி)

1 mins read
5e9870e4-b184-4df8-93bd-4d29403425b7
-

ரயிலிலிருந்து இறங்கி பயணிகள் தங்கள் உடைமைகளைப் பிடித்தபடி தண்டவாளத்தை தாண்டி செல்லும் காணொளி இணையத்தளத்தில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.

பார்ப்பவரை பதறவைக்கும் இந்த காணொளியில் வேறொரு ரயிலின் வருகை சத்தம் கேட்டு அவசரமாக தண்டவாளத்தை பயணிகள் தாண்டுவது தெரிகிறது. அந்த ரயிலின் வருகை குறித்து ஒரு பயணி எச்சரித்தும், ஒரு பெண்மணி தன் பையை தண்டவாளத்தின் ஒரு பக்கம் வைத்துவிட்டு மறுபக்கம் நிற்கும் தமது குடும்பத்தினரிடம் திரும்புகிறார். அவர் ஓர் ஆடவர் மற்றும் வேறிரண்டு நபர்களுடன் அமர்ந்திருப்பதும் இந்த காணொளியில் பதிவாகியுள்ளது.

இந்திய வன சேவை அதிகாரி சுசந்த நந்தா பகிர்ந்த இந்த காணொளி 350,500 முறை ட்விட்டர்-இல் காணப்பட்டிருக்கிறது. இச்சம்பவம் புவனேஷ்வரில் நடந்ததாக காணொளியின் தலைப்பில் அதிகாரி எழுதியிருந்த வேளையில் இது பெங்களூருவில் நடந்ததாக கருத்துக்கள் பதிவாகியுள்ளன.

பலர் இந்த காணொளியால் அதிர்ச்சியடைந்ததோடு பயணிகளின் கவனக்குறைவை விமர்சித்துள்ளனர்.