நேஷனல் ஹெரால்ட் வழக்கில் அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேரில் முன்னிலை சோனியாவிடம் விசாரணை: காங்கிரசார் போராட்டம்

புது­டெல்லி: காங்­கி­ரஸ் தலை­வர் சோனியா காந்­தி­யி­டம் மத்­திய அம­லாக்­கத்­துறை விசா­ரணை நடத்­து­வ­தற்கு எதிர்ப்பு தெரி­வித்து, காங்­கி­ரஸ் கட்சி சார்­பில் நாட்­டின் பல்­வேறு பகு­தி­களில் நேற்று ஆர்ப்­பாட்­டங்­கள் நடை­பெற்­றன.

டெல்­லி­யில் நடை­பெற்ற ஆர்ப்­பாட்­டத்­தில் பங்­கேற்ற அக்­கட்­சி­யின் மூத்த தலை­வர்­கள் ப.சிதம்­ப­ரம், அஜய் மாக்­கான் உட்­பட 75 நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் கைதா­கி­னர்.

மல்­லி­கார்­ஜுன கார்கே, சசி தரூர், சச்­சின் பைலட், ராஜஸ்­தான் முதல்­வர் அசோக் கெலாட் உள்­ளிட்­டோ­ரும் கைது செய்­யப்­பட்ட நிலை­யில், பாஜக ஆட்­சி­யில் ஜன­நா­ய­கம் படு­கொலை செய்­யப்­பட்­டுள்­ள­தாக காங்­கி­ரஸ் கண்­ட­னம் தெரி­வித்­துள்­ளது.

நேஷ­னல் ஹெரால்ட் பண மோசடி வழக்கு தொடர்­பாக காங்­கி­ரஸ் தலை­வர் சோனி­யா­காந்­தி­யி­டம் அம­லாக்­கத்­துறை நேற்று விசா­ரணை நடத்­தி­யது. அண்­மை­யில்­தான் கொரோனா தொற்­றுப் பாதிப்­பில் இருந்து அவர் மீண்டு வந்­துள்­ளார்.

இந்­நி­லை­யில் அவ­ரி­டம் விசா­ரணை நடத்­தப்­ப­டு­வ­தற்கு எதிர்ப்பு தெரி­வித்து நேற்று காங்­கி­ரஸ் கட்­சி­யி­னர் டெல்­லி­யில் மறி­யல் போராட்­டத்­தில் ஈடு­பட்­ட­னர். இதில் திர­ளா­கப் பங்­கேற்க வேண்­டும் என கட்­சித் தலை­மை­ய­கம் கேட்டுக்கொண்­டதை அடுத்து, காங்­கி­ரஸ் மூத்த தலை­வர்­கள், மக­ளிர், இளை­யர், மாண­வர் பிரி­வு­க­ளைச் சேர்ந்த நூற்­றுக்­க­ணக்­கா­னோர் கட்சி தலை­மை­ய­கம் முன்பு திரண்­ட­னர்.

பின்­னர் மத்­திய அர­சுக்கு எதி­ராக அவர்­கள் கண்­டன முழக்­கங்­களை எழுப்­பி­னர். அம­லாக்கத்­து­றை­யின் மூலம் மத்­திய அரசு சோனியா காந்­தியை மிரட்­டு­வ­தாக முழக்­கங்­களில் குறிப்­பிட்­ட­னர்.

பின்­னர் அனை­வ­ரும் அம­லாக்­கத்­துறை தலைமை அலு­வ­ல­கம் நோக்கி பேர­ணி­யா­கச் செல்ல முற்­பட்­ட­போது, காவல்­து­றை­யால் தடுக்­கப்­பட்­ட­னர்.

மேலும், அவர்­கள் மீது தண்­ணீர் பீய்ச்­சி­ய­டிக்­கப்­பட்­டது. அப்­போ­தும் கலைந்து போகா­மல் முன்­னே­றிச் சென்­ற­வர்­கள் காவல் துறை­யால் கைது செய்­யப்­பட்­ட­னர்.

இதற்­கி­டையே, சுமார் இரண்­டரை மணி நேரத்­துக்கு நடை­பெற்ற விசா­ர­ணைக்­குப் பின்­னர் சோனியா காந்தி அம­லாக்­கத்­துறை அலு­வ­ல­கத்­தில் இருந்து புறப்­பட்­டுச் சென்­றார்.

அவ­ரது வேண்­டு­கோ­ளின் பேரி­லேயே நேற்­றைய விசா­ரணை முன்­கூட்­டியே முடித்­துக்கொள்­ளப் பட்­ட­தா­கத் தெரிகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!