வரலாறு படைத்தார் திரௌபதி முர்மு

வரலாறு படைத்தார் திரௌபதி முர்மு

1 mins read
58fe7e5c-8e92-4896-aa45-817215545af0
படம்: ராய்ட்டர்ஸ் -

இந்தியாவின் புதிய அதிபராக திரௌபதி முர்மு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்திய வரலாற்றில் பழங்குடி இனத்தைச் சேர்ந்த ஒருவர் அதிபராகப் பொறுப்பேற்றிருப்பது இதுவே முதன்முறை. அந்நாட்டு அதிபராகப் பொறுப்பேற்கும் இரண்டாவது பெண், திருவாட்டி முர்மு.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளரான திரௌபதி முர்மு தன்னை எதிர்த்து போட்டியிட்ட முன்னாள் நிதியமைச்சர் யஷ்வந்த் சின்ஹாவைக் காட்டிலும் பெரும்பான்மை வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்றார்.

ஒரிசாவின் பழங்குடி இனத்தைச் சேர்ந்த 64 வயதான திருவாட்டி முர்மு, ஜார்கண்ட் மாநிலத்தின் முன்னாள் ஆளுநராவார்.

தற்போதைய அதிபர் ராம்நாத் கோவிந்தின் பதிவிக் கலாம் இம்மாதம் 24ஆம் தேதி அன்று முடிவடையும் நிலையில், திருவாட்டி முர்மு இந்தியாவின் 15வது அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.