கேரளாவில் பன்றிக் காய்ச்சல்

கேரளாவில் பன்றிக் காய்ச்சல்

1 mins read
d41785ac-6c00-4753-9290-30b49a12412b
படம்: இந்திய ஊடகம் -

கேரளாவில் ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் பரவிவருகிறது. கேரளாவின் வயநாடு பகுதியில் இரண்டு பன்றிப் பண்ணைகளில் உள்ள பன்றிகள் அண்மையில் அதிக அளவில் மாண்டன. இதனையடுத்து உயிரிழந்த பன்றிகளின் உயிர்மாதிரிகள் போபாலில் உள்ள விலங்கு நோய்களுக்கான தேசிய நிறுவனத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டன. பரிசோதனை முடிவுகளில் மடிந்த பன்றிகளுக்கு ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் இருந்தது உறுதிசெய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து பரவலைக் கட்டுப்படுத்த அந்த பண்ணைகளில் உள்ள 300 பன்றிகளை கொல்ல அதிகாரிகள் முடிவெடுத்துள்ளனர். கேரளாவில் உள்ள அனைத்து பன்றிப் பண்ணைகளும் உச்ச விழிப்புநிலையில் வைக்கப்பட்டுள்ளன. தொற்று பரவாமல் இருக்க கேரளாவிலிருந்து மற்ற மாநிலங்களுக்கு பன்றிகளை கொண்டுசெல்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதோடு, பன்றி மாமிசத்தை முறையாக சமைத்து சாப்பிடுமாறு சுகாதார அதிகாரிகள் மக்களுக்கு அறிவுறுத்தி உள்ளனர்.

ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் பன்றிகளிடையே வேகமாகப் பரவக்கூடியது. இந்தக் காய்ச்சலால் மனிதர்களுக்கு எந்த பாதிப்பும் கிடையாது.