கின்னஸ் சாதனை படைத்த இந்தியரின் கைவண்ணம்

கின்னஸ் சாதனை படைத்த இந்தியரின் கைவண்ணம்

1 mins read
83979616-c4ee-412f-a67a-bb5556fdc5ec
24,679 வைரக் கற்கள் பதிக்கப்பட்ட மோதிரம் (படம்: இந்திய ஊடகம்) -

இந்தியாவில் வடிவமைக்கப்பட்டு, தயாரிக்கப்பட்ட ஒரு மோதிரம் கின்னஸ் உலகச் சாதனையை படைத்துள்ளது.

இந்த மோதிரத்தில் மொத்தம் 24,679 வைரக் கற்கள் பதிக்கப்பட்டுள்ளன. ஒரு கைவிரல் மோதிரத்தில் ஆக அதிக அளவில் வைரங்கள் பதிக்கப்பட்டிருப்பது இதுவே முதல்முறை. மோதிரத்தின் எடை 344 கிராம். இதன் விலை 80 லட்சம் ரூபாய். அதாவது கிட்டத்தட்ட $139,000. இந்த படைப்பு கேரளாவைச் சேர்ந்த ரிஜி‌‌‌‌‌ஷாவின் கைவண்ணத்தில் பிறந்தது. அகமதாபாத்தைச் சேர்ந்த ஒரு நகைக் கடை அவரை அணுகி 15 நாள்களுக்குள் ஒரு வித்தியாசமான மோதிரத்தை உருவாக்குமாறு கேட்டுக்கொண்டது.

காளான் போன்ற உருவம் கொண்ட மோதிரத்தை உருவாக்கி அதில் வைரக் கற்கள் பதிக்கப்பட்டன. 24,000 கற்களை ஒன்றென்றாக கையால் பதிக்க 90 நாள்கள் எடுத்தன. ஐந்து பேர் கொண்ட குழு இதற்காக வேலைபார்த்தது.

இந்த மோதிரம் கின்னஸ் உலகச் சாதனையையும், ஆசிய சாதனையையும் படைத்துள்ளது. மோதிரம் கூடியவிரைவில் விற்பனைக்கு விடப்படும் என்று கூறப்பட்டது.

இதற்கு முன், சாதனை படைத்த மோதிரத்தில் 12,639 வைரக் கற்கள் இருந்தன. அதுவும் இந்தியாவில்தான் உருவாக்கப்பட்டது.