கோல்கத்தா: மேற்கு வங்கத்தில் நிகழ்ந்த ஆசிரியர் பணி நியமன முறைகேடு தொடர்பாக அந்த
மாநிலத்தின் தொழில், வர்த்தக அமைச்சர் பார்த்தா சட்டர்ஜி,
இந்திய நேரப்படி நேற்று காலை கைது செய்யப்பட்டார்.
கிட்டத்தட்ட 24 மணி நேர விசாரணைக்குப் பிறகு இந்திய அமலாக்கத் துறை அதிகாரிகள் சட்டர்ஜியை அவரது இல்லத்தில் கைது செய்தனர்.
மேற்கு வங்கத்தின் கல்வி அமைச்சராக சட்டர்ஜி இருந்தபோது, ஆசிரியர் பணி நியமன முறைகேடு நிகழ்ந்ததாகக் கூறப்
படுகிறது.
சட்டர்ஜியைக் கைது செய்ததும் அதிகாரிகள் அவரை அவரது
வீட்டிலிருந்து நேரடியாக மருத்துவ
மனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டது.
சட்டர்ஜி, மேற்கு வங்கத்தை ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் தலைமைச் செயலாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே, சட்டர்ஜியின் உதவியாளரான அர்பிதா முகர்ஜியின் வீட்டிலிருந்து அமலாக்கத் துறையினர் நேற்று முன்தினம் கிட்டத்தட்ட ரூ. 20 கோடி ($3,600,000) ரொக்கத்தைப் பறிமுதல் செய்தனர்.
ஆசிரியர் பணி முறைகேடு தொடர்பாக மேற்கு வங்கத்தில் பல்வேறு இடங்களில் அதிகாரிகள் அதிரடிச் சோதனை நடத்தி
உள்ளனர்.
பறிமுதல் செய்யப்பட்ட தொகை, முறைகேடு மூலம் சட்டர்ஜிக்குக் கிடைத்திருக்கக்கூடும் என்று
அதிகாரிகள் நம்புகின்றனர்.
லஞ்சம் கொடுத்தவர்களை
சட்டர்ஜி ஆசிரியர்களாக நியமித்ததாகச் சந்தேகிக்கப்படுகிறது.
இதனால் அந்தப் பணிக்கு
உண்மையிலேயே தகுதிபெற்றவர்
களுக்கு வேலை கிடைக்காமல் போனதாகக் கூறப்படுகிறது.
உயர் மதிப்பெண்கள் பெற்று ஆசிரியர் பணிக்குத் தகுதி
உள்ளவர்களைப் புறக்கணித்து,மேற்கு வங்கத்தில் தற்போதைய கல்வி அமைச்சர் பரேஷ் சந்திரா அதிகாரியின் மகளுக்கு அந்த வேலை வழங்கப்பட்டது.
திரு அதிகாரியின் மகளைப் பணி நீக்கம் செய்யக் கோரி கோல்கத்தா உயர் நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது.

