'தடபுடலாகத் திறந்துவைக்கப்பட்ட விரைவுச்சாலை சில நாள்களிலேயே குண்டும் குழியுமாக உள்ளது'

'தடபுடலாகத் திறந்துவைக்கப்பட்ட விரைவுச்சாலை சில நாள்களிலேயே குண்டும் குழியுமாக உள்ளது'

1 mins read
0e608e5c-7d0b-4d25-b582-b8c23ef0c1df
-

புது­டெல்லி: அண்­மை­யில் உத்­த­ரப் பிர­தேசத்தில் 296 கிலோ­மீட்­ட­ர்

நீள­முள்ள புத்­தம் புதிய விரை­வுச்­சாலை தற்­போது மோச­மான நிலை­யில் இருப்­ப­தாக பார­திய ஜனதா கட்­சி­யின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் வருண் காந்தி குறை­கூ­றி­யுள்­ளார்.

அந்த விரை­வுச்­சா­லையை

இந்­தி­யப் பிர­த­மர் நரேந்­திர மோடி சில நாள்­க­ளுக்கு முன்பு அதி­கா­ர­பூர்­வ­மா­கத் திறந்­து­வைத்­தார்.

"அந்த விரை­வுச்­சா­லை­யைக் கட்டி முடிக்க ரூ. 15,000 கோடி செல­வா­னது. ஆனால் கடந்த ஐந்து நாள்­க­ளாகப் பெய்த மழை­யைக்­கூட அத­னால் எதிர்­கொள்ள முடி­ய­வில்லை. எனவே, புதி­தா­கக் கட்­டப்­பட்ட விரை­வுச்­சா­லை­யின் தரத்­தைப் பற்றி கேள்­வி­கள் எழு­

கின்­றன," என்று டுவிட்­டரில் வருண் காந்தி பதி­விட்­டார்.

சம்பந்தப்பட்ட அதிகாரிகள், நிறுவனங்களுக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

ஆளும் கட்­சி­யின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னரே அதி­ருப்­திக் குரல் எழுப்­பி­யதை அடுத்து, இது­கு­றித்து எதிர்க்­கட்­சி­களும் போர்க்கொடி உயர்த்தியுள்ளன.

பாரதிய ஜனதா கட்சி அரை மனதுடன் மேம்பாட்டுப் பணிகளில் கவனம் செலுத்துவதற்கு இது ஓர் உதாரணம் என்று சமாஜ்வாடி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் சாடியுள்ளார்.