கேரளாவைச் சேர்ந்த ஷைஜா,36, எனும் பெண்ணுக்கு மீசை என்றால் ஒரே ஆசை. எவ்வளவு ஆசை என்றால், அந்த மீசையை அவரே வளர்த்து வருகிறார் என்றால் பாருங்கள்.
கேரளாவில் கண்ணூர் மாவட்டத்தைச் சேர்ந்த அவரது முறுக்கு மீசையை சிலர் கேலி செய்வார்கள். சிலர் ஆச்சரியமாகப் பார்ப்பார்கள். ஆனால், இந்தக் கருத்துகளைப் பற்றியெல்லாம் தாம் அலட்டிக் கொள்வதில்லை என்கிறார் ஷைஜா.
இவர் சிறுமியாக இருக்கும் போது இவருடைய முகத்தில் அதிக அளவு முடிகள் வளர்ந்துள்ளது. அப்போது இவரை பார்ப்பவர்கள், அவரின் முகத்தில் உள்ள முடியை பார்த்து கேலி, கிண்டல் செய்து வந்துள்ளனர். அப்போது அவர் மிகவும் மன வேதனையுடன் இருப்பாராம். பிறகு இவருக்கு அதுவே பழகிவிட்டது.
எனவே ஷைஜா மீசை வளர்க்க முடிவு செய்தார். இந்த நிலையில் இவருக்கு பாலக்காடை சேர்ந்த லட்சுமணன் என்பவருடன் திருமணம் நடந்தது அவரது கணவரும் நீ மீசை வளர்ப்பதில் எனக்கு ஒரு பிரச்சனையும் இல்லை.
நான் அதற்கு தடையாக இருக்க மாட்டேன் என கூறியுள்ளார். லட்சுமணன் பாலக்காட்டு பகுதியில் வயரிங் வேலை செய்து வருகிறார். இப்போது இந்த பகுதியில் உள்ள பெண்கள் கூட ஷைஜா வளர்க்கும் மீசையை கண்டு புகழ்ந்து வருகின்றனர்.
ஷைஜா மீசை வளர்ப்பதற்கு சிலர் ஆதரவு குரல் கொடுத்து வருகின்றனர். கேலி பேசிய ஆண்களும் இந்த முயற்சிக்கு பெரும் ஆதரவு அளித்து வருகின்றனர். மேலும் ஷைஜா திருப்பூர் நகரில் உள்ள பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இவரை இப்போது இந்த பகுதியில் உள்ளவர்கள் மீசை ஷைஜா என கூறி அழைத்து வருகின்றனர்.

