புதுடெல்லி: இந்தியாவில் புதிதாக இதுவரை இல்லாத ஒரு வரலாறு இன்று படைக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் நடந்த தேர்தலில் அமோக வெற்றி பெற்ற திரௌபதி முர்மு இன்று நாட்டின் 15வது அதிபராகப் பதவி ஏற்கிறார்.
இந்திய வரலாற்றில் பழங்குடி இனத்தைச் சேர்ந்த ஒருவர் அதிபராவது இதுவே முதல் முறை என்பதால் முர்மு பதவி ஏற்பு ஒரு மிக முக்கிய நிகழ்ச்சி என்று தகவல்கள் தெரிவித்து உள்ளன.
நாடாளுமன்ற மத்திய அரங்கில் நடக்கும் பதவி ஏற்பு நிகழ்ச் சிக்கு முன்னதாக 21 குண்டுகள் முழங்கும் என்று உள்துறை அமைச்சு தெரிவித்தது. இந்திய தலைமை நீதிபதி என் வி ரமணா அதிபருக்குப் பதவிப் பிரமாணம் செய்துவைப்பார்.

