நாக்பூர்: மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் வாகனங்களை நிறுத்தி வைக்கக்கூடாத ஓர் இடத்தில் ஸ்கூட்டரை ஒருவர் நிறுத்திவைக்க முயன்றார்.
அதைப் பார்த்த அதிகாரிகள், அந்த இடத்தில் வாகனத்தை நிறுத்தி வைக்கக் கூடாது என்று அவரிடம் கூறினர். ஆனால் அவர் கேட்கவில்லை. வாகனத்தைவிட்டு இறங்க மறுத்துவிட்டார்.
இதனால் பாரந்தூக்கி வாகனத்தின் உதவியுடன் அதிகாரிகள், அந்த ஓட்டுநருடன் சேர்த்து அவருடைய ஸ்கூட்டரை அப்படியே தூக்கிச் சென்றுவிட்டனர். (மேல்படம்)
பாரந்தூக்கி மூலம் தூக்கப்பட்டபோதுகூட அந்த ஓட்டுநர் அது பற்றி கவலைப்பட்டதாகத் தெரியவில்லை.
அப்போதும்கூட பாரந்தூக்கி ஓட்டுநருடன் பேசிக்கொண்டே அவர் தன் வாகனத்தில் அமர்ந்திருந்தார்.
குற்றச்செயலில் ஈடுபட்ட அந்த நபருக்கு ரூ.760 அபராதம் விதிக்கப்பட்டது. இந்தச் சம்பவத்தை அப்படியே காட்டும் காணொளி சமூக வலைத்தளங்களில் பரபரப்பாகப் பரவி வருகிறது.

