சாலை ஓர வியாபாரியிடம் அமைச்சர் பேசிய பேரம் அரசியலானது

சாலை ஓர வியாபாரியிடம் அமைச்சர் பேசிய பேரம் அரசியலானது

2 mins read
d121dc7f-44fb-4d7c-9714-8acbe2c9aaa4
சோளக்கதிர் 15 ரூபாயா, அநியாயம் என்று சாலை ஓர வியாபாரி சிறுவனிடம் பேரம் பேசும் அமைச்சர். படம்: ஊடகம் -

போபால்: இந்­தி­யா­வில் சாலை­யோர வியா­பா­ரி­யி­டம் மக்காச் சோளம் வாங்­கு­வ­தற்கு மத்­திய இணை­ அமைச்­சர் பேரம் பேசி­ய­தாக வெளி­யான தக­வல் அர­சி­யல் சர்ச்சையை ஏற்­ப­டுத்தி உள்­ளது.

மத்­திய பிர­தே­சத்­தின் மாண்ட்லா தொகு­தி­யில் இருந்து எம்பியான ஃபக்­கன் சிங் குலாஸ்தே, இப்­போது மத்­திய எஃகு, ஊரக வளர்ச்சி இணை­ய­மைச்­ச­ராக இருக்­கி­றார்.

அம்­மா­நில பாஜ­க­வின் மூத்த தலை­வ­ரு­மான அவர், தான் தன் தொகு­திக்­குச் சென்று வந்­த­தைக் காட்­டும் ஒரு காணொ­ளி­யைச் சமூக ஊட­கத்­தில் பதிவேற்­றி­னார்.

"சாலை ஓரத்­தில் சோளம் வாங்கிச் சாப்­பிட்­டோம். அரு­மை­யாக இருந்­தது.

"நாம் அனை­வ­ரும் உள்­ளூர் விவ­சா­யி­கள், உள்­ளூர் கடைக்­கா­ரர்களி­ட­மி­ருந்து உண­வுப் பொருள்களை வாங்க வேண்­டும். இது அவர்­க­ளுக்கு வேலை வாய்ப்பை­யும், கலப்­ப­ட­மற்ற பொருள்­கள் விற்­பனை தடை­யை­யும் உறுதி செய்­யும்," என்று காணொ­ளி­யில் அமைச்­சர் பேசி­னார்.

அமைச்­சர் அந்த வியா­பா­ரி­யிடம் பேசி­யதை அப்­ப­டியே காணொளி காட்­டி­யது. மூன்று சோளக் கதிர் 45 ரூபாய் என்று சாலை ஓர வியா­பா­ரி­யான சிறு­வன் அமைச்­ச­ரி­டம் சொல்­வ­தும், விலை அதி­க­மாக இருக்­கி­றதே என அமைச்­சர் கூறு­வ­தும் காணொ­ளி­யில் தெரி­கிறது.

"இது சரியான விலை­தான், நீங்­கள் காரில் வந்­தி­ருப்­ப­தால் நான் விலையை உயர்த்திச் சொல்­ல­வில்லை," எனச் சிறு­வன் சொல்ல, அமைச்­சரோ, "இந்­தப் பகு­தி­யில் சோளம் இல­வ­ச­மா­கவே கிடைக்­கிறது. பிறகு எதற்கு விலை உயர்வு," என்ற ரீதி­யில் கேள்வி எழுப்பி, பிறகு சிறு­வன் கேட்ட பணத்தைக் கொடுக்­கி­றார்.

அமைச்சரின் காணொ­ளி­யைக் கண்ட எதிர்க்­கட்­சி­கள், 'சாலை யோரத்­தில் சோளம் விற்று பிழைக்­கும் சிறு­வனி­டம் மத்­திய இணை­ய­மைச்­சர் பேரம் பேசு­வதா' என்று குறை­கூறத் தொடங்­கின. மத்­தி­யப் பிர­தேச காங்­கி­ரஸ் மத்­திய அமைச்­சரைக் கடு­மை­யாக விமர்­சித்து வரு­வ­தாக நேற்று தக­வல்­கள் தெரி­வித்­தன.