இந்தியாவின் 15வது அதிபராக திரெளபதி முர்மு இன்று பதிவியேற்றுகொண்டார். அந்நாட்டின் முதல் பழங்குடி அதிபர் என்ற வரலாறற்றை அவர் படைத்துள்ளார்.
திரௌபதி என்ற பெயர் தனக்கு தமது பள்ளி ஆசிரியர் சூட்டியதாக அவர் ஒரு நேர்காணலின்போது பகிர்ந்துகொண்டார். இவருக்கு பெற்றோர் வைத்த பெயர் சந்தாளி. "அந்த பெயரை எனது ஆசிரியருக்கு பிடிக்கவில்லை. அதனால் திரௌபதி என்று மாற்றினார்," என்று திருவாட்டி முர்மு கூறினார்.
ஆண்கள் ஆதிக்கம் நிறைந்த அரசியலில், பெண்களுக்கு இட ஓதுக்கீடு செய்யப்படவேண்டும் என்று திருவாட்டி முர்மு குறிப்பிட்டுள்ளார். ஆக்கப்பூர்வமான அரசியலில் பெண்கள் ஈடுபடவேண்டும். பெண் உரிமைக்காக அவர்கள் குரல் எழுப்பவேண்டும் என அவர் கூறியுள்ளார்.
தனது வாழ்க்கையில் பல இன்னல்களை சந்தித்திருப்பதாகக் குறிப்பிட்டார் திருவாட்டி முர்மு.
2013ல் தனது மூத்த மகனை ஒரு வாகன விபத்தில் பறிகொடுத்தார் திருவாட்டி முர்மு. இதனை தொடர்ந்து ஆறு மாதக் காலக்கட்டத்துக்குள், அவருடைய சகோதரர், தாயார், கணவர் ஆகியோர் உயிரிழந்தனர்.
அந்த சமயத்தில் தானும் எந்நேரமும் உயிரிழக்கக்கூடும் என்று தனக்கு தோன்றியதாக கூறிய திருவாட்டி முர்மு, மகிழ்ச்சியும் சோகமும் நிறைந்திருப்பதுதான் வாழ்க்கை என்றார்.

