(காணொளி) கரும்புக்காக சாலை மறியல்

(காணொளி) கரும்புக்காக சாலை மறியல்

1 mins read
f0d223f0-8147-40b1-a1e2-8db998707fbc
லாரியை நகரவிடாமல் மறித்துகொண்டிருந்த யானைகள் (படம்: இந்திய ஊடகம்) -

இந்தியாவில் வனப்பகுதிகள் வாழும் மிருகங்கள் அடிக்கடி உணவு மற்றும் தண்ணீர் தேடி சாலையோரம் வருவது வழக்கம். ஆனால் அண்மையில் ஒரு யானையும் அதன் குட்டியும் சாலையை வழிமறித்துகொண்டு நின்றன. காரணம் எதிரே வந்த லாரியில் கட்டுக்கட்டாக கரும்புகள் இருந்தன. யானைகள் இரண்டும் லாரியை எதுவும் செய்யாமல் அதை பார்த்த வண்ணம் நின்றன. வாகனத்தை எடுக்க வழி இல்லாமல் லாரி ஓட்டுநர் சாலையிலேயே அதனை நிறுத்தியதால் மற்ற வாகனங்களும் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.

சிறிது நேரம் கழித்து லாரியில் இருந்த ஒருவர் சில கரும்பு துண்டுகளை எடுத்து கீழே வீசினார். கரும்பு தின்ன கூலியா? சாலையை மறித்துகொண்டிருந்த யானைகள் உடனே ஒருபுரம் நகர்ந்தன. கரும்புகளை சுவைக்க தொடங்கின.

இந்தக் காட்சி பதிவுசெய்யபட்ட காணொளியை இந்திய வனத்துறை அதிகாரி ஒருவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துகொண்டார். காணொளியுடன் ஒரு எச்சரிக்கையையும் அவர் விடுத்தார். காட்டில் வாழும் மிருகங்களுக்கு உணவளிக்க வேண்டாம் என அவர் கேட்டுக்கொண்டார்.

இந்த காணொளி 1.6 மில்லியன் முறை பார்க்கப்பட்டுள்ளது.