நாடாளுமன்றம்: காங்கிரஸ் எம்பிக்கள் நால்வர் இடைநீக்கம்

நாடாளுமன்றம்: காங்கிரஸ் எம்பிக்கள் நால்வர் இடைநீக்கம்

2 mins read
7c426520-b80d-42fa-8b9f-f2f8cee6fc01
-

புது­டெல்லி: நாடா­ளு­மன்­றத்­தில் அம­ளி­யில் ஈடு­பட்ட காங்­கி­ரஸ் கட்­சி­யைச் சேர்ந்த நான்கு பேர் கூட்­டத்­தொ­டர் முழு­வ­தும் இடை­நீக்­கம் செய்­யப்­பட்­டுள்­ள­தாக சபா­நா­ய­கர் அறி­வித்­துள்­ளார்.

நேற்று மக்­க­ளவை கூடி­ய­தும், விலை­வாசி உயர்­வைக் கண்­டித்து காங்­கி­ரஸ் கட்சி உறுப்­பி­னர்­கள் பேச முற்­பட்­ட­னர். எனி­னும், சபா­நா­ய­கர் இதற்கு அனு­மதி அளிக்­க­வில்லை.

இத­னால் காங்­கி­ரஸ் உறுப்­பி­னர்­கள் மத்­திய அர­சுக்கு எதி­ராக கண்­டன முழக்­கங்­கள் எழுப்­பினர். அக்­கட்­சி­யின் தமி­ழக எம்­பிக்­க­ளான ஜோதி­மணி, மாணிக்­கம் தாக்­கூர் உட்­பட நான்கு பேர், கையில் கண்­டன வாச­கங்­க­ளு­டன் கூடிய பதா­கை­களை ஏந்­தி­ய­படி, மக்­க­ள­வை­யின் மையப்­ப­கு­திக்கு வந்து முழக்­கங்­கள் எழுப்­பி­ய­தால் சபா­நா­ய­கர் கண்­டித்­தார்.

அவைக்­குள் பதா­கை­களை ஏந்தி, அவை நட­வ­டிக்­கை­க­ளுக்கு இடை­யூறு ஏற்­ப­டுத்­தக்கூடாது என்றும் அவர் அறி­வு­றுத்­தி­னார்.

இந்­நி­லை­யில், மற்ற காங்­கி­ரஸ் உறுப்­பி­னர்­களும் எதிர்க்­கட்சி எம்­பிக்­களும் விலை­வாசி உயர்­வுக்கு எதி­ராக முழக்­கங்­கள் எழுப்­பி­ய­து­டன் மத்­திய அர­சைக் கண்­டித்­தும் குரல் கொடுத்­த­னர். இத­னால் அவை­யில் அமளி நில­வி­யது.

சபா­நா­ய­கர் பல­மு­றைக் கேட்­டுக்­கொண்­டும் எதிர்க்­கட்சி உறுப்­பி­னர்­கள் இருக்­கை­யில் அம­ரா­மல், அம­ளி­யில் ஈடு­பட்­டதை அடுத்து, அவை நட­வ­டிக்­கை­களை பிற்­ப­கல் மூன்று மணி வரை ஒத்­தி­வைப்­ப­தாக சபா­நா­ய­கர் அறி­வித்­தார்.

அதன் பின்­னர் அவை மீண்­டும் கூடி­ய­போது, எதிர்க்­கட்சி உறுப்­பி­னர்­கள் தொடர்ந்து அம­ளி­யில் ஈடு­பட்­ட­னர். அப்­போது அவை நட­வ­டிக்­கைக்கு இடை­யூறு ஏற்­ப­டுத்­தி­ய­தாக நடப்பு கூட்­டத்­தொ­ட­ரில் இருந்து காங்­கி­ரஸ் கட்சி உறுப்­பி­னர்­கள் நான்கு பேரை இடை­நீக்­கம் செய்­வ­தாக சபா­நா­ய­கர் உத்­த­ர­விட்­டார்.

மழைக்­கா­லக் கூட்­டத்­தொ­டர் தொடங்­கி­யது முதல், நாடா­ளு­மன்­றத்­தில் ஜிஎஸ்டி, பெட்­ரோல், டீசல் உயர்வு உள்­ளிட்ட பிரச்­சி­னை­களை முன்­னிட்டு எதிர்க்­கட்­சி­கள் தொடர்ந்து அம­ளி­யில் ஈடு­பட்டு வரு­கின்­றன.

இப்­பி­ரச்­சி­னை­கள் குறித்து விவா­திக்க வேண்­டும் என்று அக்­கட்­சி­கள் வலி­யு­றுத்தி உள்ள நிலை­யில், மத்­திய அரசு இக்­கோரிக்­கையை ஏற்­க­வில்லை.

மக்களவை நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக சபாநாயகர் அறிவிப்பு