இரு பேருந்துகள் மோதி விபத்து: எட்டு பேர் பலி

இரு பேருந்துகள் மோதி விபத்து: எட்டு பேர் பலி

1 mins read
ddd069d8-f367-4f3d-a6ad-83dc7b10cbe8
-

உத்தரப் பிரதேச மாநிலத்தில் நேற்று காலை இரண்டு பேருந்துகள் மோதிக் கொண்ட கோர விபத்தில் எட்டு பேர் பலியாகிவிட்டனர். மேலும் 20 பேர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். டெல்லி நோக்கிச் சென்ற ஒரு பேருந்து, சாலையோரம் நின்றிருந்த மற்றொரு பேருந்தின் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இரு பேருந்துகளுமே இரண்டு அடுக்குக் கொண்டவை என்றும் தலைநகர் லக்னோவில் இருந்து

30 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பாராபங்கி மாவட்டத்தில் விபத்து நடந்துள்ளது என்றும் ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

படம்: ஊடகம்