தங்கக் கடத்தல் வழக்கை பெங்களூருக்கு மாற்ற எதிர்ப்பு

திரு­வ­னந்­தபுரம்: கேர­ளாவை உலுக்­கி­யுள்ள தங்­கக் கடத்­தல் வழக்கு தொடர்­பான விசா­ர­ணையை பெங்­க­ளூரு நீதி­மன்­றத்­துக்கு மாற்­றக்­கூடாது எனக் கோரி இவ்­வ­ழக்­கில் குற்­றம்­சாட்­டப்­பட்­டுள்ள சிவ­சங்­கர் உச்ச நீதி­மன்­றத்­தில் மனு ஒன்றை தாக்­கல் செய்­துள்­ளார்.

கேரள முதல்­வ­ரின் முன்­னாள் முதன்­மைச் செய­லா­ள­ரான அவர், தமது தரப்பை விசா­ரிக்­கா­மல் வழக்கை உயர் நீதி­மன்­றத்­துக்கு மாற்ற தடை விதிக்க வேண்­டும் என கேட்­டுக்­கொண்­டுள்­ளார்.

"ஒரு வழக்­கில் குற்ற பத்­திரிகை தாக்­கல் செய்­யப்­பட்ட பிறகு வேறு மாநி­லத்­துக்கு அந்த வழக்கை மாற்றக்­கூ­டாது.

"ஆனால், இந்த வழக்கு அரசியல் கார­ணங்­க­ளுக்­காக தொடுக்­கப்­பட்டது. எனவே, வழக்கை வேறு மாநி­லத்­துக்கு மாற்­று­வது சரி­யல்ல," என்று சிவ­சங்­கர் தமது மனு­வில் குறிப்­பிட்­டுள்­ளார்.

தங்­கக்­க­டத்­தல் வழக்கு தொடர்­பாக மத்­திய அம­லாக்­கத்­துறை தீவிர நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்டு வரு­கிறது. இந்­நி­லை­யில், இந்த வழக்கை வலு­வி­ழக்­கச் செய்­வ­தற்­கான நட­வ­டிக்­கைள் பகி­ரங்­க­மாக நடை­பெற்று வரு­வ­தாக அம­லாக்­கத்­துறை சாடி­யுள்­ளது.

மேலும், அம­லாக்­கத்­துறை அதி­கா­ரி­கள் மீது கேரள காவல்­துறை வழக்கு பதிவு செய்­தி­ருப்­ப­தை­யும் மத்­திய சட்ட ஆணை­யத்­தில் அம­லாக்க முகமை குறித்து புகார் அளிக்­கப்­பட்­டி­ருப்­ப­தை­யும் அம­லாக்க அதி­கா­ரி­கள் சுட்­டிக்­காட்டி உள்­ள­னர்.

இதை­ய­டுத்து, உச்ச நீதி­மன்­றத்தை அணுகி உள்­ளது அம­லாக்க முகமை.

"கேர­ளா­வில் இருந்த சக்­தி­வாய்ந்த சிலர் இந்த வழக்­கில் குறுக்­கி­டு­கின்­ற­னர். நான்­கா­வது குற்­ற­வா­ளி­யின் நட­வ­டிக்­கை­யின் கார­ண­மாக, பண மோசடி தடுப்­புப் பிரி­வின் கீழ் நடத்­தப்­படும் விசா­ர­ணை­யைக் குலைக்க தொடக்­கம் முதலே முயற்சி நடந்து வரு­கிறது," என்று அம­லாக்க முகமை உச்ச நீதி­மன்­றத்­தில் தாக்­கல் செய்த மனு­வில் குறிப்­பிட்­டுள்­ளது.

மேலும், இந்த வழக்­கில் குற்­றம்­சாட்­டப்­பட்­டுள்ள ஸ்வப்னா சுரேஷ் அளித்­துள்ள வாக்­கு­மூ­லத்­தில் கேரள முதல்­வ­ருக்­கும் அவ­ரது குடும்­பத்­தா­ருக்­கும் தங்­கக்­க­டத்­த­லில் தொடர்பு உள்­ள­தாக குற்­றம்­சாட்டி இருப்­ப­தை­யும் அம­லாக்க முகமை சுட்­டிக்­காட்டி உள்­ளது.

எனி­னும் தங்­கக் கடத்­தல் விவ­கா­ரத்­தில் தமக்­கும் தனது குடும்­பத்­தா­ருக்­கும் எந்­த­வி­தத் தொடர்­பும் இல்லை என கேரள முதல்­வர் திட்­ட­வட்­ட­மாக மறுத்­துள்­ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!