ராய்ப்பூர்: இருசக்கர வாகனத்தில் இருந்து ஒலி எழுப்பியும் வழிவிடாததால் ஆத்திரமடைந்த 15 வயது சிறுமி காதுகேளாத மாற்றுத் திறனாளியை கத்தியால் குத்திக கொன்றார்.
நேற்று முன்தினம் ராய்ப்பூரில் தனது தாயாரு டன் இருசக்கர வாகனத் தில் கடைக்குச் சென்றார் அச்சிறுமி. அப்போது அவர் ஒலி எழுப்பியும் வழிவிடாத தால், அவரது வண்டிக்கு முன்னால் சென்ற வாகனத்தைத் தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
பின்னர் கோபத்தில் தன்னிடம் இருந்த சிறிய கத்தியை எடுத்த சிறுமி, அந்த நபரின் கழுத்தில் குத்தியதில் அந்தக் காதுகேளாத ஆடவர் அங்கேயே பலியானார்.

