5ஜி ஏலம்: வேகம் காட்டாத நிறுவனங்கள்

5ஜி ஏலம்: வேகம் காட்டாத நிறுவனங்கள்

1 mins read
b0ca069d-1553-454d-8652-c51e25c37083
-

புது­டெல்லி: 5ஜி அலைக்­கற்­றை­களுக்­கான ஏலம் நேற்று தொடங்­கி­யது. இதில் நாட்­டின் முன்­னணி தொலைத்­தொ­டர்பு நிறு­வ­னங்­களான அதானி டேட்டா நெட்­வொர்க்ஸ், ரிலை­யன்ஸ், ஏர்­டெல், வோட­ஃபோன் ஆகிய நான்­கும் பங்­கேற்­றன.

எனி­னும் அலைக்­கற்றை உரி­மை­யைப் பெறு­வ­தில் இந்­நி­று­வனங்­க­ளுக்கு இடையே பெரி­தாக ஆர்­வம் தென்­ப­ட­வில்லை என்று ஊட­கத் தக­வல்­கள் தெரி­விக்­கின்றன.

எனி­னும் குறைந்த எண்­ணிக்­கை­யி­லான நிறு­வ­னங்­கள் மட்­டுமே பங்­கேற்­றுள்­ள­தால், எதிர்­வரும் அக்­டோ­பர் மாதத்­துக்­குள் 5ஜிக்­கான ஏலம் முடி­வ­டைந்து, சோதனை தொடங்­கும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

இம்­முறை அம்­பானி, அதானி நிறு­வ­னங்­க­ளுக்கு இடை­யே­தான் கடும் போட்டி நில­வு­வ­தா­க­வும் கூறப்­ப­டு­கிறது.

ஏலத்­தில் தொடர்ந்து பங்­கேற்க இது­வரை நான்கு நிறு­வ­னங்­கள் வைப்­புத்­தொகை செலுத்­தி­யுள்­ளன. அதில் அதி­க­பட்­ச­மாக ரிலை­யன்ஸ் ஜியோ நிறு­வ­னம் ரூ.14 ஆயி­ரம் கோடி­யும், பார்தி ஏர்­டெல் நிறு­வ­னம் ரூ.5,500 கோடி­யும் வோட­ஃபோன் ஐடியா ரூ.2,200 கோடி­யும், அதானி குழு­மம் ரூ.100 கோடி­யும் செலுத்­தி­யுள்­ளன.

4ஜி இணைப்பைவிட 5ஜி இணைய இணைப்பானது பத்து மடங்கு வேகமாக இருக்கும்.