மூன்றாண்டு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் ஜெட் ஏர்வேஸ்

மூன்றாண்டு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் ஜெட் ஏர்வேஸ்

1 mins read
a2b71082-731f-492b-b482-cc520ad8da66
-

புது­டெல்லி: கிட்­டத்­தட்ட மூன்று ­ஆண்டு இடை­வெ­ளிக்­குப் பிறகு ஜெட் ஏர்­வேஸ் விமா­னங்­கள் மீண்­டும் பறக்க உள்­ளன. ஆனால், இம்­முறை புதிய உரி­மை­யா­ள­ரின் நிர்­வா­கத்­தில் ஜெட் ஏர்­வேஸ் புத்து­யிர் பெற உள்­ளது. வரும் செப்­டம்­பர் முதல் சரக்கு விமா­னங்­களை அது இயக்­கும்.

தொடர்ந்து விமா­னப் போக்­கு­வரத்­துத் துறை­யில் நிலைத்திருக்கும் வகை­யில் அடுத்த ஈராண்­டு­களில் ரூ.1,300 கோடியை ஜேகேசி எனப்­படும் அதன் புதிய நிர்­வா­கம் செல­வி­டும்.

விமா­னப் போக்­கு­வ­ரத்­துச் சந்தை­யில் மீண்­டும் இடம்­பெ­றும் வகை­யில் சில மாற்­றங்­களை ஜெட் ஏர்­வேஸ் செய்து உள்­ளது.

27 ஆண்­டு­க­ளா­கச் செயல்­பட்டு­வந்த ஜெட் ஏர்­வேஸ் விமான நிறு­வ­னம் 2019 ஏப்­ரல் மாதம் தனது இயக்­கத்தை நிறுத்­தி­யது. அதன் பின்­னர் விமா­னப் போக்­கு­வ­ரத்து தலைமை இயக்­க­கம் விதித்த பல்­வேறு நிபந்­த­னை­களை பூர்த்தி செய்து மீண்­டும் இயக்­கும் உரி­மையை ஜேகேசி நிறு­வ­னம் பெற்­றுள்­ளது.

1992 ஏப்­ர­லில் நரேஷ் கோயல் என்­ற வர்த்­த­க­ரால் தொடங்­கப்­பட்ட ஜெட் ஏர்­வேஸ் விமான நிறு­வ­னம் 1993ஆம் ஆண்­டில் விமா­னங்­களைப் பறக்­க­விட்­டது. சிறி­ய­தும் பெரி­ய­து­மாக 124 விமா­னங்­களை இயக்­கி­வந்த ஜெட் ஏர்­வேஸ், செப்­டம்­பர் மாதம் 11 சரக்கு விமா­னங்­களு­டன் மீண்­டும் செயல்­படும் என்று அதி­கா­ரத்­துவப் பேச்­சா­ளர் ஒரு­வர் கூறினார்.