68 நகரங்களில் 2,877 மின்னூட்டல் நிலையங்கள்

68 நகரங்களில் 2,877 மின்னூட்டல் நிலையங்கள்

2 mins read
fd692934-8292-4267-9c0a-e86e3f770701
இந்திய அரசாங்கம், ஒன்பது முக்கிய நகரங்களில் மின்னூட்ட நிலையங்களின் எண்ணிக்கையை இரண்டரை மடங்குக்கு அதிகரித்துள்ளது. கோப்புப் படம்: இந்திய ஊடகம் -

புது­டெல்லி: இந்­தியா முழு­வ­தும் 68 நக­ரங்­களில் 2,877 மின்­சார வாக­னங்­க­ளுக்­கான மின்­னூட்டல் நிலை­யங்­களை நிறுவ அரசு அனு­மதி­ய­ளித்­துள்­ளது.

'ஃபேம் இந்­தியா' எனும் திட்­டத்­தின் கீழ் பொது போக்­கு­வ­ரத்­தில் மின்­சார வாக­னங்­களை ஊக்கு ­விக்க அர­சாங்­கம் துரித நட­வ­டிக்கைகளை எடுத்து வரு­கிறது.

மத்­திய கன­ரக தொழில்­துறை அமைச்சு, 532 மின்­சார வாகன மின்­னூட்டல் நிலை­யங்­களை நிறுவி ­யுள்­ளது.

இது தொடர்­பாக நாடா­ளு­மன்ற மக்­க­ள­வை­யில் உறுப்­பி­னர்­க­ளின் கேள்­விக்கு எழுத்­து­பூர்­வ­மாக பதில் அளித்த மத்­திய கன­ரக தொழில்­துறை இணை அமைச்­சர் கிரி­ஷன் பால் குர்­ஜார், மின்­சார வாக­னங்­ க­ளின் பெரிய அள­வி­லான பயன்­பாட்­டிற்குத் தேவை­யான உள்­கட்­ட­மைப்பை மேம்­ப­டுத்த மத்­திய அரசு கடந்த 2015 ஆண்டு 'ஃபேம் இந்­தியா' (FAME INDIA) எனும் திட்­டத்தை நடை­மு­றைப்­ப­டுத்­தி­யது என்­றார்.

"இந்தத் திட்­டத்­தின் இரண்­டாம் கட்­டம், 2019 ஏப்­ரல் முதல் 5 ஆண்டு­க­ளுக்குச் செயல்­ப­டுத்­தப் ­ப­டு­கிறது. 'ஃபேம் இந்­தியா' திட்­டத்­தின் இரண்­டாம் கட்­டத்­தில் ரூ.1,000 கோடி மின்­னூட்ட உள்­கட்­ட­மைப்பு மேம்­பாட்­டுக்­காக ஒதுக்­கப்­பட்­டுள்­ளது. இந்­நி­லை­யில், பொதுப் போக்­கு­வ­ரத்­தில் மின்­சார வாக­னங்­களை ஊக்­கு­விக்­கும் வகை­யில் ஃபேம் இந்­தியா திட்­டம் நட­வ­டிக்கை எடுத்து வரு­கிறது. இதன் அடிப்­ப­டை­யில் நாடு முழு­வ­தும் 25 மாநி­லங்­கள், யூனி­யன் பிர­தே­சங்­க­ளைச் சேர்ந்த 68 நக­ரங்­களில் 2,877 மின்­சார வாகன மின்­னூட்ட நிலை­யங்­க­ளுக்கு ஃபேம் இந்­தியா திட்­டத்­தின் கீழ் கன­ர­கத் தொழில்­துறை அமைச்­சு ஒப்­பு­தல் வழங்­கி­யுள்­ளது," என்று அவர் குறிப்­பிட்­டார். "மேலும், இந்­தத் திட்­டத்­தின் கீழ் 9 விரை­வுச் சாலை­கள் மற்­றும் 16 நெடுஞ்­சா­லை­களில் 1,576 மின்­னூட்ட நிலை­யங்­க­ளுக்­கும் அனு­மதி வழங்­கப்­பட்­டுள்­ளது.

'ஃபேம் இந்­தியா' திட்­டத்­தின் முதல் கட்­டத்­தின் கீழ் 520 மின்­னூட்­டல் நிலை­யங்­கள் நிறு­வப்­பட்­டுள்­ளன. நாட்­டில் மின்­சார வாக­னங்­க­ளுக்­குத் தேவை­யான மின்­னூட்ட உள்­கட்­ட­மைப்பை மேம்­ப­டுத்­து­வ­தற்கு மத்­திய அரசு பல்­வேறு நட­வ­டிக்­கை­கள் எடுத்து வரு­கிறது," என்று அமைச்­சர் கிரி­ஷன் பால் குர்­ஜார் தெரி­வித்­தார்.