'அமலாக்கத் துறைக்கு கைது செய்ய அதிகாரமுள்ளது'

'அமலாக்கத் துறைக்கு கைது செய்ய அதிகாரமுள்ளது'

2 mins read
f0330c24-6e6c-4bfd-9ee0-6bf7cc79939e
-

புது­டில்லி: அம­லாக்­கத்­து­றைக்கு பண­மோ­சடி தடுப்­புச் சட்­டத்­தின் கீழ் ஒரு­வரை கைது செய்ய அதி­கா­ரம் உள்­ளது என்று உச்ச நீதி­மன்­றம் தீர்ப்பு வழங்­கி­யுள்­ளது.

அம­லாக்­கத்­து­றை­யி­னர் மற்­றும் பண­மோ­சடி தடுப்­புச் சட்­டத்­தின் கீழ் சில விதி­களை எதிர்த்து மெக­பூபா முப்தி, கார்த்தி சிதம்­ப­ரம் உள்­ளிட்­டோர் உச்ச நீதி­மன்­றத்­தில் வழக்­குத் தொடுத்­த­னர்.

மனு­தா­ரர்­கள் சார்­பில் முன்­னி­லை­யான வழக்­க­றி­ஞர், கைது செய்­யப்­ப­டு­வ­தற்­கான ஆதா­ரங்­க­ளைக் காட்­டா­மல் குற்­றம்­சாட்­டப்­பட்­ட­வர்­க­ளைக் கைது செய்­வ­தற்கு தடை­யற்ற அதி­கா­ரம் அம­லாக்­கத் துறைக்கு வழங்­கப்­பட்­டது அர­சி­யல் சாச­னத்­திற்கு விரோ­த­மா­னது என்று கூறி­னார்.

ஆனால் மத்­திய அரசு, அர­சி­ய­ல­மைப்­புச் சட்­டத்­தின்­படி பண­மோ­சடி தடுப்பு சட்­டத்­தின் விதி­களை நியா­யப்­ப­டுத்­தி­யது.

மேலும், பண­மோ­சடி நிதி அமைப்புகளுக்கு மட்­டு­மல்­லா­மல், நாட்­டின் ஒரு­மைப்­பாடு மற்­றும் இறை­யாண்­மைக்கு அச்­சு­றுத்­த­லாக மாறும் எனக்­கூறி பண­மோ­சடி தடுப்பு சட்­டத்­தில் செய்­யப்­பட்ட திருத்­தங்­களை மத்­திய அரசு ஆத­ரித்­தது.

இது தொடர்­பான விசா­ரணை முடி­வ­டைந்த நிலை­யில் உச்ச நீதி­மன்­றம் நேற்று தீர்ப்பு வழங்­கி­யது.

"பண­மோ­ச­டி­யில் ஈடு­பட்­ட­வர்­க­ளைக் கைது செய்­வது தன்­னிச்­சை­யான நட­வ­டிக்கை அல்ல. பண­மோ­சடி தடுப்பு சட்­டத்­தின் கீழ் சோதனை செய்ய, கைது செய்ய, வழக்­குப்­ப­திவு செய்ய, 'சீல்' வைக்க அம­லாக்­கத்­து­றைக்கு அனு­மதி உள்­ளது.

"பண­மோ­சடி தடுப்பு சட்­டத்­தின் கீழ் எடுக்­கப்­பட்ட நட­வ­டிக்கை களின் அம­லாக்­கத்­துறை தக­வல் அறிக்­கையை குற்­றம்­சாட்­டப்­பட்­ட­வர்­க­ளுக்கு கொடுக்க வேண்­டி­யது இல்லை. இது­வும் எப்­ஐ­ஆர்-ம் (முதல் தக­வல் அறிக்கை) ஒன்று அல்ல. 2002க்கு முன் நடந்த முறை­கேடு புகார்­களில் அம­லாக்­கத்­துறை பண­மோ­சடி தடுப்­பு­சட்­டத்­தின் கீழ் நட­வ­டிக்கை எடுக்க அனு­மதி உண்டு," என உச்ச நீதி­மன்­றம் தீர்ப்­பில் தெரி­வித்­துள்­ளது.