கர்நாடகாவில் பாஜக நிர்வாகி வெட்டிக் கொலை

கர்நாடகாவில் பாஜக நிர்வாகி வெட்டிக் கொலை

2 mins read
d45feb7d-531c-4386-80a8-a4ea6e268a32
பிரவீனை மர்ம நபர்கள் ஆயுதங்களால் தாக்கினர்.படம்: இந்திய ஊடகம் -

பெங்­க­ளூரு: கர்­நா­டக மாநி­லம் சூல்யா தாலுகா நெட்­டாறு பகு­தி­யில் வசிக்­கும் தட்­சிண கன்­னடா மாவட்ட பாஜக யுவ­மோர்ச்சா மாவட்­டச் செய­லா­ள­ரான பிர­வீனை (வயது 32) அடை­யா­ளம் தெரி­யாத நபர்­கள் வெட்டி படு­கொலை செய்து உள்­ள­னர்.

நேற்று முன்­தி­னம் இரவு நெட்­டாறு பகு­தி­யில் உள்ள தனது கோழி இறைச்­சிக் கடையை மூடிக் கொண்­டி­ருந்­த­போது அவரை சிலர் மோட்­டார் சைக்­கி­ளில் வந்து, கோடாரி, வாளால் சர­மா­ரி­யா­கத் தாக்­கி­னர். இதில் பலத்த காய­ம­டைந்த அவர் ரத்த வெள்­ளத்­தில் சாய்ந்­தார்.

அக்­கம்­பக்­கத்­தில் இருந்­த­வர்­கள் அவரை மருத்­து­வ­ம­னைக்குக் கொண்டு சென்­ற­னர். ஆனால் அவர் வழி­யி­லேயே உயி­ரி­ழந்­தார்.

இந்­தச் சம்­ப­வம் பார­திய ஜனதா ஆட்சி நடத்­தும் கர்­நா­டக மாநி­லத்­தில் பெரும் பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

பிர­வீ­னைக் கொலை செய்­த­வர்­கள் முக­மூடி அணிந்து வந்­துள்­ள­னர். அவர்­கள் வந்த மோட்­டார் சைக்­கிள் கேரள மாநி­லம் பதிவு எண்­களை கொண்­ட­தா­கும். பிர­வீன் கொலை குறித்து பெல்­லாரி காவல்­து­றை­யி­னர் வழக்­குப் பதிவு செய்து விசா­ரணை நடத்தி வரு­கின்­ற­னர்.

இந்த நிைலயில் கொலை­யா­ளி­களைக் கைது செய்­யக் கோரி பா.ஜ.க. உறுப்­பி­னர்­கள் பலர் இரவி லிருந்து தெரு­வில் அமர்ந்து ஆர்ப்­பாட்­டம் நடத்தி வரு­கின்­ற­னர். பா.ஜ.க.வின­ரின் போராட்­டம் விடிய, விடிய நடந்­தது.

புத்­தூ­ரில் உள்ள மருத்­து­வ­மனை முன்­பாக இந்து அமைப்­பி­னர் திரண்டு போராட்­டத்­தில் ஈடு­பட்­டார்­கள். பெல்லாரி, நெட்­டாறு பகுதிகளில் கடை­கள் அடைக்­கப்­பட்­டன. புத்­தூர், சூல்யா, கடப்பா தாலுகா முழு­வ­தும் இந்து அமைப்­பி­னர் நேற்று வேலை நிறுத்தம் நடத்­தி­னர். இத­னால் அந்தப் பகுதி வீதி­கள் வெறிச்­சோடி காணப்­பட்­டன.

கர்­நா­டக முதல்­வர் பச­வ­ராஜ் பொம்மை, படு­கொ­லைச் சம்­ப­வத்தை கண்­டித்­துள்­ளார்.

"தட்­சிண கன்­னடா மாவட்­டத்­தைச் சேர்ந்த எங்­கள் கட்­சித் தொண்­டர் பிர­வீன் காட்டு மிராண்­டித்­த­ன­மா­கக் கொல்­லப்­பட்­டது கண்­டிக்­கத்­தக்­கது. இது­போன்ற கொடூ­ரச் செயல்­களில் ஈடு­படு பவர்­கள் விரை­வில் கைது செய்­யப்­பட்டு சட்­டத்­தின் கீழ் தண்­டிக்­கப்­ப­டு­வார்­கள்," என்று டுவிட்­டர் பதி­வில் அவர் குறிப்­பிட்­டுள்­ளார்.

பிர­வீ­னின் உடல் பெல்­லாரி அருகே நெட்­டா­றில் உள்ள வீட்­டில் தக­னம் செய்­யப்­ப­டு­கிறது. இதை யடுத்து புத்தூர், பெல்லாரி, சூல்யா ஆகிய இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.