குரங்கம்மைக்குத் தடுப்பூசி தயாரிக்க இந்தியா ஆயத்தம்

குரங்கம்மைக்குத் தடுப்பூசி தயாரிக்க இந்தியா ஆயத்தம்

1 mins read
bf901f60-b363-4a47-99e3-d31528aeedfc
-

புது­டெல்லி: குரங்­கம்­மைக்­குத் தடுப்­பூசி தயா­ரிக்க இந்­திய அர­சாங்­கம் ஆலோ­சித்து வரு­கி­றது.

"சாத்­தி­ய­மான மருந்­தாக்க நிறு­வ­னங்­க­ளு­டன் ஏற்­கெ­னவே பேச்சு நடத்தி வரு­கி­றோம்," என்று தேசிய கொவிட்-19 பணிக்­கு­ழு­வின் தலை­வர் டாக்­டர் வினோத் குமார் பால் தெரி­வித்­தார்.

"எங்­க­ளுக்குத் தடுப்­பூசி தயா­ரிக்­கும் ஆற்­றல் இருக்­கிறது என்­பது அறிந்­ததே. இத­னால் அரசு இதில் மும்­மு­ர­மாக ஈடு­பட்டு வரு­கிறது," என்று அவர் குறிப்­பிட்­டார்.

இந்­தியா குரங்­கம்மைப் பாதிப்பை அணுக்­க­மா­கக் கண்­கா­ணித்து வரு­கிறது.

அண்­மை­யில் உலக சுகா­தார நிறு­வ­ன­மும் அந்­நோயை உலக சுகா­தார நெருக்­க­டி­யா­க­வும் அறி­வித்­தது. இந்த நிலை­யில் குரங்­கம்­மை­யைக் கண்­டு­பி­டிக்­கும் சோதனை நிலை­யங்­களை 15 இடங்­களில் இந்­திய அரசு அமைத்­துள்­ளது. அந்த நிலை­யங்­களில் இரண்டு அடுக்கு பிசி­ஆர் சோதனை­களை நடத்த போது­மான வச­தி­கள் இருப்­ப­தாக டாக்­டர் பால் தெரி­வித்­தார்.

இதுவரை இந்­தி­யா­வில் நான்கு பேருக்கு குரங்­கம்மைப் பாதிப்பு இருப்­பது உறுதி செய்­யப்­பட்­டுள்­ளது.