'காங்கிரஸ் மன்னிப்புக் கேட்க வேண்டும்'

'காங்கிரஸ் மன்னிப்புக் கேட்க வேண்டும்'

2 mins read
e5c74d5d-910b-4131-9934-605d3efcf152
எதிர்க்கட்சி எம்பிக்கள் நேற்று அமளியில் ஈடுபட்டதாக தெரிவிக்கப் பட்டது. படம்: பிடிஐ -

புது­டெல்லி: புதிய அதி­பர் திெரளபதி முர்­முவை 'ராஷ்­டி­ர­பத்னி' என்று குறிப்­பிட்­ட­தற்­காக காங்­கி­ரஸ் கட்சி மன்­னிப்­புக் கேட்க வேண்­டும் என்று வலி­யு­றுத்தி நாடா­ளு­மன்­றத்­தில் ஆளும் பார­திய ஜனதா கட்­சி­யி­னர் நேற்று அம­ளி­யில் ஈடு­பட்­ட­னர்.

காங்­கி­ரஸ் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களில் ஒரு­வ­ரான ஆதிர் ரஞ்­சன் சவுத்ரி அவ்­வாறு குறிப்­பிட்­டது புதிய சர்ச்­சையை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

நேஷ­னல் ஹெரால்டு வழக்­கில் சோனியா காந்­தி­யி­டம் அம­லாக்­கத்­துறை விசா­ரணை நடத்­தி­ய­தற்கு எதி­ராக காங்­கி­ரஸ் கட்­சி­யி­னர் ஆர்ப்­பாட்­டம் நடத்­தி­ய­போது அவர் இதனை தெரி­வித்தார்.

ராஷ்­டி­ர­பதி பவ­னுக்கு அணி­வகுத்து செல்­வது குறித்து பேசிய அவர், 'ராஷ்­டி­ர­பத்னி' என்று குறிப்­பிட்­டார்.

இத­னால் அவ­ருக்கு கடும் கண்­ட­னம் தெரி­வித்­துள்ள பாஜ­க­வி­னர் மன்­னிப்­புக் கேட்க வேண்­டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளனர்.

ஆதிர் ரஞ்­சன் சவுத்ரி வேண்டு­ மென்றே இவ்­வாறு ஜனா­தி­ப­தியை அவ­ம­தித்­தி­ருப்­ப­தாக பாஜ­க­வி­னர் குற்­றம்­சாட்­டு­கின்­ற­னர்.

ஆதிர் ரஞ்­சன் சவுத்ரி கூறிய கருத்­துக்­காக காங்­கி­ரஸ் கட்­சி­யின் தலை­வர் சோனியா காந்தியும் மன்னிப்பு கேட்க வேண்­டும் என பாஜக உறுப்­பி­னர்­கள் முழக்­க­மிட்­ட­னர்.

இந்த நிலையில் செய்தியாளர் களிடம் பேசிய நிதி அமைச்­சர் நிர்­மலா சீதா­ரா­மன், தெள்­ளத்­தெளி ­வாக புதி­தாக தேர்ந்­தெ­டுக்­கப்­பட்ட அதி­பரை அவ­மா­னப்­ப­டுத்தி அவர் பேசி­யி­ருக்­கி­றார் என்­றார்.

அதே சமயத்தில் விலை­வாசி உயர்வு குறித்து விவா­திக்க வலி­யு­றுத்­தி­யும் எம்­பிக்­கள் இடை­நீக்­கம் செய்­யப்­பட்­டதை திரும்­பப் பெற வலி­யு­றுத்­தி­யும் எதிர்க்­கட்சி உறுப்­பி­னர்­கள் முழக்­க­மிட்­ட­னர்.

இத­னால் கடும் அமளி ஏற்­பட்­டது. இதை­ய­டுத்து மதி­யம்­வரை இரு அவை­களும் ஒத்­தி­வைக்­கப்­பட்­டன. 12 மணிக்குப் பிற­கும் அமளி நீடித்­த­தால் மாநி­லங்­க­ளவை இரண்டு மணி வரை ஒத்­தி­வைக்­கப்­பட்­டது.

ஆனால் மன்­னிப்பு கேட்க போவ­தில்லை என்று ரஞ்­சன் சவுத்ரி கூறி­யுள்­ளார். வாய் தவறி அந்த வார்த்தை வந்­து­விட்­டது. அதி­பரை அவ­ம­ரி­யாதை செய்ய வேண்­டும் என்ற எண்­ண­மில்லை. ஊட­கங்­க­ளி­டம் பேசும்­போது கவ­னக்குறை­வாக அந்த வார்த்­தை­யைப் பயன் ­ப­டுத்தி­விட்­ட­தாக அவர் கூறினார்.

இந்த நிலையில் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தெரிவித்த கருத்து தொடர் பாக லோக்சபாவில் அமளி ஏற்பட்ட நிலையில், காங்கிரஸ் தலைவர் சோனியா, பாஜக எம்.பி.யிடம் கேள்வி எழுப்பியபோது ஸ்மிருதி இரானி குறுக்கிட்டார்.

அப்போது என்னுடன் பேச வேண்டாம் என அவரிடம் கோபமாக சோனியா காந்தி தெரிவித்துவிட்டு சென்றதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதற்­கி­டையே நேற்று அம­ளி­யில் ஈடு­பட்ட எதிர்க்­கட்­சி­யைச் சேர்ந்த மேலும் மூன்று எம்­பிக்­கள் அவை நட­வ­டிக்­கை­யில் பங்­கேற்க தடை விதிக்­கப்­பட்­டது. ஆம் ஆத்மி கட்­சி­யைச் சேர்ந்த சண்­டீப் குமார் பதக், சுஷில் குமார் குப்தா ஆகி­யோ­ரும் அவர்­களில் அடங்­கு­வர். இவர்­க­ளு­டன் சேர்த்து மொத்­தம் 27 எம்­பிக்­கள் இடை­நீக்­கம் செய்­யப்­பட்­டுள்­ள­னர்.