தாதியருக்காக கடைக்காரர் எடுத்து வைத்த லாட்டரிச் சீட்டுக்கு ரூ.72 லட்சம் முதல் பரிசு

2 mins read
90cde23d-762b-4b38-bcf7-e3f4ad43bffc
கடைக்காரருடன் தாதியர் சந்தியா. படம்: இந்திய ஊடகம் -

திரு­வ­னந்­த­பு­ரம்: கேர­ளா­வில் வியா­பாரி ஒரு­வர் தன்­னி­டம் வழக்­க­மாக லாட்­ட­ரிச் சீட்டு வாங்­கும் தாதி­ய­ருக்­காக ஒரு லாட்­ட­ரிச் சீட்டை எடுத்து வைத்­தி­ருந்­தார். அந்­தச் சீட்­டுக்கு முதல் பரி­சாக ரூ. 72 லட்­சம் கிடைத்­துள்­ளது. உடனே கடைக்­கா­ரர் தாதி­ய­ருக்கு தக­வல் கொடுத்­துள்­ளார். கடைக்­கா­ர­ரின் நேர்­மையை பலர் பாராட்டி வரு­கின்­றர்.

இடுக்கி மாவட்­டம் தொடு­புழா பகு­தி­யில் உள்ள ஒரு லாட்­டரி கடை­யில் அதே பகு­தியை சேர்ந்த தாதி சந்­தியா என்­ப­வர் லாட்­ட­ரிச் சீட்டு வாங்­கு­வார். கடைக்­கா­ரர் அவ­ருக்­காக ஒரு சீட்டை எடுத்து அதனை தனி­யாக ஒரு உறை­யில் போட்டு வைப்­பார். பரிசு குலுக்­கல் நடந்த பின்­னர், அந்த சீட்­டுக்கு பரிசு விழுந்­தி­ருக்­கி­றதா? என்­பதை பார்த்­து­விட்டு அதனை தாதி­யர் சந்­தி­யா­வி­டம் தெரி­விப்­பார்.

கடைக்­கா­ரர் எடுத்து வைக்­கும் சீட்டை ஒரு­போ­தும் சந்­தியா வாங்கி பார்ப்­ப­தில்லை. கடைக்­கா­ரர் கூறு­வதை மட்­டும் கேட்­டுக்­கொள்­வார்.

இந்த நிலை­யில் அண்­மை­யில் 'ஸ்திரி சக்தி' லாட்­டரி விற்­பனை நடந்­தது. இதற்­கான சீட்டு ஒன்­றை­யும் சந்­தி­யா­வுக்­காக கடைக்­கா­ரர் எடுத்து வைத்­தி­ருந்­தார்.

இரண்டு நாட்­க­ளுக்கு முன்பு குலுக்­கல் முடி­வு­கள் வெளி­யா­னது. இதில் சந்­தி­யா­வுக்­காக கடைக் காரர் எடுத்து வைத்­தி­ருந்த சீட்­டுக்கு முதல் பரி­சான ரூ.72 லட்­சம் (S$124,600) விழுந்­தி­ருந்­தது.

இந்த விவ­ரத்தை உடனே தாதி சந்­தி­யா­வுக்கு அவர் தெரி­வித்­தார். இதனை கேட்டு வியப்­பில் மூழ்­கிய சந்­தியா, லாட்­டரி விற்­ப­னை­யா­ள­ரின் நேர்­மையை பாராட்­டி­னார்.

"எனக்­காக கடைக்­கா­ரர் எடுத்து வைத்த சீட்­டின் எண் எனக்­குத் தெரி­யாது. அவர் நினைத்­தி­ருந்­தால் சீட்டை மாற்றி இருக்­க­லாம். ஆனால் அவர் அப்­ப­டிச் செய்­ய­வில்லை. அவ­ரது நேர்மை என்னை ஆச்­ச­ரி­யப்­ப­டுத்­து­கிறது," என்று கூறி­யுள்­ளார்.

கடைக்­கா­ர­ருக்கு பரிசுப் பணத்­தில் ஒரு சிறிய பங்கை சந்­தியா கொடுத்­தாரா என்­பது பற்றி தக­வல் இல்லை.