செய்திக்கொத்து

செய்திக்கொத்து

1 mins read
981e2e5d-5a24-4a63-88b6-4f08727a56cc
-

தொற்று மீண்டும் அதிகரிப்பு

புது­டெல்லி: இந்­தி­யா­வில் கொரோனா தொற்று மூன்று நாட்­க­ளுக்­குப் பிறகு மீண்­டும் 20,000ஐத் தாண்­டி­யுள்­ளது.

மத்­திய சுகா­தா­ரத்­துறை நேற்று காலை வெளி­யிட்ட அறிக்­கை­யில் கடந்த 24 மணி நேரத்­தில் புதி­தாக 20,557 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ள­தா­கத் தெரி­வித்­தது.

கடந்த 24ஆம் தேதி பாதிப்பு 20,279ஆக இருந்­தது. 25ஆம் தேதி 16,866ஆக­வும் 26ஆம் தேதி 14,830ஆக­வும் 27ஆம் தேதி 18,313ஆக­வும் இருந்த நிலை­யில் நேற்று மீண்­டும் 20 ஆயி­ரத்தை தாண்டி உள்­ளது.

பாஜக பிரமுகர் கொல்லப்பட்ட

வழக்கில் இருவர் கைது

பெங்­க­ளூரு: கர்­நா­டகா­வில் பாஜக பிர­மு­கர் கொல்­லப்­பட்ட வழக்­கில் இரு­வர் கைது செய்­யப்­பட்­டுள்­ள­னர். கடந்த செவ்­வாய்க்­கி­ழமை தட்­சிண கன்­னடா மாவட்­டம் சுள்­ளியா தாலுகா பெல்­லாரே அருகே உள்ள நெட்­டார் கிரா­மத்தை சேர்ந்­த­வ­ரும் மாவட்ட பா.ஜனதா இளை­ஞர் அணி செயற்­குழு உறுப்­பி­ன­ரு­மான பிர­வீன், 32 தனது கோழி இறைச்­சிக் கடையை இர­வில் மூடிக்­கொண்­டி­ருந்­த­போது அவரை மூன்று மோட்­டார் சைக்­கிள்­களில் வந்த மர்ம நபர்­கள் ஆயு­தங்­க­ளால் சர­மா­ரி­யாக வெட்­டி­ய­தில் உயி­ரி­ழந்­தார். இந்த நிலை­யில் 15 பேரி­டம் தீவிர விசா­ரணை நடத்தி இரு­வரை காவல்­ து­றை­யி­னர் கைது செய்­துள்­ள­னர்.