இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ஓர் அரசு பள்ளியில் மாணவிகள் வெறி பிடித்தது போல போட்ட கூச்சல் பள்ளி ஊழியர்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
மாணவர்கள் பலர் கூச்சலிட்டு, அலறி, தலையில் அடித்துக்கொண்டு உருள்வது போன்ற வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன.
உத்தரகாண்ட் மாநிலம், பாகேஷ்வரில் உள்ள அரசு பள்ளியில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இதைத் தொடர்ந்து மறுநாள் அரசு ஊழியர்களும் மருத்துவர்களும் அந்தப் பள்ளிக்கு வருகை புரிந்தனர். அன்றும் இதுபோல மாணவிகள் இவ்வாறு நடந்துகொண்டனர். மாணவிகளுன் பெற்றோர்
பள்ளியில் பில்லி சூனியம் உள்ளது என்று நம்பி பள்ளியில் பூசைகள் நடத்தவேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.

