இந்தியாவின் மத்திய பிரதேசத்தில் ஒரு பள்ளியைச் சேர்ந்த 40 சிறுவர்களுக்கு ஒரே ஊசியில் கொவிட்-19 தடுப்பூசி போடப்பட்டது. தடுப்பூசி போட்டவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வட்டாரத்துக்கான தடுப்பூசி நடவடிக்கை அதிகாரி தற்காலிகமாக பதவி விலகல் செய்யப்பட்டுள்ளார்.
சிறுவர்களுக்கு தடுப்பூசி போட்ட ஜித்தேந்திரா என்பவர் தடுப்பூசி நடவடிக்கையை மேற்கொள்ள தனக்கு ஒரேஓர் ஊசி மட்டுமே அனுப்பப்பட்டதாகக் கூறியுள்ளார். அதை வைத்து அனைத்த மாணவர்களுக்கும் தடுப்பூசி போடுமாறு தமது மேல் அதிகாரி தனக்கு உத்தரவிட்டதாக அவர் குற்றச்சாட்டியுள்ளார். ஒரே ஊசியைக் கொண்டு ஒருவருக்கு மேல் தடுப்பூசி போடக்கூடாது என்பது தனக்கு தெரிந்திருந்தாலும், மேல் அதிகாரி சொன்னதால் வேறுவழியின்றி அவ்வாறு செய்ததாக அவர் சொன்னார்.
15 வயதுக்கு குறைந்த 40 மாணவர்களுக்கு தடுப்பூசி போடும் நடவடிக்கை சில நாள்களுக்கு முன் நடந்தது. இதில் அனைத்து மாணவர்களுக்கும் ஒரே ஊசி பயன்படுத்தப்பட்டதை சில பெற்றோர் கவனித்துள்ளனர். இது குறித்து மேல் அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளனர்.
இதில் சம்பந்தப்பட்ட மற்ற அதிகாரிகளுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட அதிகாரி கூறியுள்ளார்.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட அனைத்து மாணவர்களுக்கும் பாதிப்பு எதாவது ஏற்பட்டுள்ளதா என்று உறுதிசெய்ய அவர்களுக்கு ரத்த பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

