இந்திய ஆகாயப்படையைச் சேர்ந்த ஒரு போர்விமானம், ராஜஸ்தான் பாலைவனத்துக்கு அருகே விழுந்து நொறுங்கியதில் விமானத்திற்குள் இருந்த இரு விமானிகளும் மாண்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அத்வித்யா பால், எம். ரானா ஆகியோர் மாண்டதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
பயிற்சியின்போது, எம்ஐஜி-21 ரக விமானம் விபத்துக்குள்ளானதாகக் கூறப்பட்டது. விமானம் விழுந்த இடத்தில் தீ கொளுந்துவிட்டும் எரியும் காணொளிகள் இந்திய ஊடகங்களில் வெளிவந்துள்ளன.
சம்பவம் குறித்து மேற்கொண்டு விசாரணை நடத்தப்படும் என்று இந்திய ஆகாயப்படை கூறியது.
சென்றண்டு தொடக்கத்திலிருந்து ஆறு எம்ஐஜி-21 ரக விமானங்கள் விழுந்து நொறுங்கியுள்ளன. இந்த சம்பவங்களில் ஐந்து விமானிகள் மாண்டுள்ளனர்.
இந்திய ஆகாயப்படை எம்ஐஜி-21 ரக விமானங்களை 1960களிலிருந்து பயன்படுத்திவருகிறது. கடந்த பல ஆண்டுகளான இந்த ரக விமானங்கள் பல விபத்துக்குள்ளாகியுள்ளன.
இந்நிலையில், அதன் விமானங்களை இந்திய ஆகாயப்படை புதுப்பித்து வருகிறது. அண்மையில் பிரான்சிலிருந்து ரபேல் போர்விமானங்களை இந்திய ஆகாயப்படை வாங்கியுள்ளது.