பொதுவாக குழந்தைகளுக்குப் பிரச்சினை என்றால், அது உடல் ரீதியாகனதாகவோ மன ரீதியானதாகவோ இருந்தாலும் சரி, பெற்றோர் உடனே அவர்களுக்கு உதவ களத்தில் இறங்கிவிடுவர். உடனே தீர்வுகளையும் கொடுப்பார்கள்.
மனிதர்கள் மற்றவர்களின் உயிரைக் காக்கும் மருத்து முதலுதவி முறைகளைக் கற்றுக்கொள்வதும் வழக்கமானதே. ஆனால் இங்கே தனது குட்டிக்கு ஆபத்து என்று தெரிந்தவுடன் அனிச்சையாக முதலுதவி செய்து அதன் உயிரைக் காப்பாற்றி உள்ளது ஒரு குரங்கு.
இதன் காணொளி இணையத்தில் பார்ப்பவர் மனதைக் கொள்ளையடித்து வருகிறது.
இந்திய வன சேவை அதிகாரி சுசந்தா நந்தா பகிர்ந்த அந்த காணொளியில் குட்டிக் குரங்கின் தொண்டையில் ஏதோ உணவுப் பொருள் மாட்டிக்கொண்ட்டுவிட்டது. அதை வெளியில் எடுக்க குரங்கு செய்த முயற்சிகள் 'ஹைம்லிக் மனூவர் (Heimlich manoeuvre) போன்ற ஒரு முதலுதவியைச் செய்கிறது.

