இந்தியாவில் மக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்வதை ஊக்குவிக்க, பூரி விற்கும் ஒருவர் சொந்த முயற்சியில் இறங்கியுள்ளார்.
தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு பூரியுடன் சென்னா மசாலாவையும் இலவசமாக வழங்க அவர் முன்வந்துள்ளார்.
கூடுதல் தடுப்பூசி போட்டுக்கொள்ள பல இந்தியர்கள் தயங்குகின்றனர். தடுப்பூசி போட்டுக்கொள்ள தகுதிபெற்றிருந்தாலும், பூஸ்ட்டர் தடுப்பூசி போட்டுக்கொண்ட இந்தியர்களின் எண்ணிக்கை இன்னும் குறைவாக உள்ளது.
இவர்களை ஊக்குவிக்க இந்த முயற்சியில் இறங்கியுள்ளதாக 45 வயது கடைக்காரர் சன்ஜே ரானா குறிப்பிட்டுள்ளார்.
இந்த சலுகையைத் தடுப்பூசி போட்டுக்கொண்ட நாளான்று மட்டுமே பயன்படுத்திக்கொள்ள முடியும். இலவச உணவை பெற்றுகொள்ள, தடுப்பூசி சான்றிதழை சன்ஜேயிடம் காட்டவேண்டும். அப்போது பூரியும் சுடசுட சென்னா மசாலா வழங்கப்படும்.
சன்ஜேயின் முயற்சியை இந்தியப் பிரதமர் நரேந்திரா மோடி கேள்விபட்டு, இது குறித்து தனது மாதந்திர வானொலி ஒலிபரப்பில் பேசியுள்ளார். சமூகத்தின் நன்மைக்காக பங்காற்றும் சன்ஜேக்குத் தனது வாழ்த்துகளை திரு மோடி தெரிவித்துகொண்டார்.

