ரூ.1.5 லட்சம் கோடிக்கு அலைக்கற்றை விற்பனை

ரூ.1.5 லட்சம் கோடிக்கு அலைக்கற்றை விற்பனை

2 mins read
dc44b7af-f8ef-4dad-8e69-bbf41bcfbbab
-

5ஜி சேவைக்கான ஏலத்தின் ஐந்தாம் நாள் நிலவரம்

புது­டெல்லி: 5ஜி அலைக்­கற்றை ஏலத்­தின் ஐந்­தாம் நாளன்று 1.5 லட்­சம் கோடி ரூபாய்க்கு அலைக்­கற்றை விற்­ப­னை­யா­ன­தாக மத்­திய அரசு தெரி­வித்­துள்­ளது.

நாடு முழு­வ­தும் 5ஜி சேவையை அறி­மு­கப்­ப­டுத்த மத்­திய அரசு திட்­ட­மிட்­டுள்­ளது. அதற்­கான நட­டிக்­கை­கள் தொடங்கி உள்­ளன.

முதற்­கட்­ட­மாக அலைக்­கற்றை ஏலம் தொடங்கி உள்­ளது. கடந்த சில நாள்க­ளாக நடை­பெற்று வரும் ஏலத்­தின் மூலம் மத்­திய அர­சுக்கு கணி­ச­மான வரு­வாய் கிடைக்­கும் என்று பொரு­ளி­யல், தொழில்­நுட்ப நிபு­ணர்­கள் கூறு­கின்­ற­னர்.

இம்­முறை முகேஷ் அம்­பா­னி­யின் ரிலை­யன்ஸ் ஜியோ, சுனில் மிட்­ட­லின் பாரதி ஏர்­டெல், வோட­போ­னின் ஐடியா, அதா­னி­யின் அதானி என்­டர்­பி­ர­சைஸ் ஆகிய முன்­னணி நிறு­வ­னங்­க­ளுக்கு மத்­தி­யில் 5ஜி அலைக்­கற்­றை­களை வாங்­கு­வ­தில் பலத்த போட்டி நிலவி வரு­கிறது.

தொடக்­கத்­தில் இந்­நி­று­வ­னங்­கள் ஏலத்­தில் வேகம் காட்­ட­வில்லை. செவ்­வாய்க்­கி­ழமை அன்று தொடங்­கிய ஏலத்­தில் சற்றே மந்­த­நிலை காணப்­பட்­ட­தா­கத் தக­வல் வெளி­யா­னது. ஆனால் போகப்­போக போட்டி கடு­மை­யாகி வரு­வதா­கக் கூறப்­படு­கிறது.

இந்­நி­லை­யில், நேற்று முன்­தி­னம் ஐந்­தா­வது நாளன்று ரூ.1.49,855 கோடிக்கு அலைக்­கற்­றை­கள் ஏலம் எடுக்­கப்­பட்­டன. இதன்­மூ­லம், 71 விழுக்காடு அலைக்­கற்றை விற்­கப்­பட்­டு­விட்­ட­தாக மத்­திய அரசு கூறி­யது.

5ஜி சேவைக்­கான இந்த ஏல நட­வ­டிக்கை மொத்­தம் ஒன்பது பிரி­வு­க­ளாக நடை­பெ­றும். 72 ஜிகா­ஹெட்ஸ் அலைக்­கற்­றையை ஏலத்­தில் விட்டு, ரூ.4.3 லட்­சம் கோடியை திரட்ட மத்­திய அரசு இலக்கு நிர்­ண­யித்து இருக்­கிறது.

5ஜி அலை­வ­ரி­சையை நிறு­வ­னங்­க­ளுக்கு ஒதுக்­கீடு செய்­யும் பணி ஆகஸ்ட் 14 ஆம் தேதிக்­குள் நடந்து முடி­யும் என எதிர்­பார்க்­கப்­படு­கிறது. இதற்­கான அனைத்து நடை முறை­களும் நடை­பெற்று வரு­வ­தாக மத்­திய அர­சுத் தரப்பு தெரி­வித்­துள்­ளது. எனவே, செப்­டம்­பர் மாதத்­தில் 5ஜி சேவை­கள் தொடங்­கும் என­வும் மத்­திய அரசு தரப்­பில் தெரி­விக்­கப்­பட்டு உள்­ளது.

விதி­க­ளின்படி 5ஜி அலைக் கற்றை ஏலம் தொடர்­பான சில முக்­கிய விவ­ரங்­களை ஏலம் முடி­யும்வரை வெளிப்­ப­டுத்­தக் கூடாது என்­பது விதி­மு­றை­யா­கும்.

சந்­தை­யில் கடும் போட்டி நில­வும்­போது வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்­கான சலு­கை­கள் அதி­க­ரிக்­கும் என்­றும் சேவை­யின் தரம் மேம்­படும் என்­றும் துறை­சார் நிபு­ணர்­கள் தெரி­வித்­துள்­ள­னர்.